News April 24, 2024
பாதி கலக்கம், பாதி நம்பிக்கை (2)

பிரசாரத்தின்போது திமுக இனி இருக்காது எனப் பிரதமர் மோடி காட்டமாகப் பேசியிருந்தார். அண்ணாமலையும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராகக் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதை வைத்து பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால், தங்களுக்குக் குடைச்சல் கொடுக்கும் என்றும், கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் கைதானது போலத் தங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமோ என்றும் திமுக கலக்கத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
Similar News
News January 12, 2026
அண்ணாமலை போட்டியிடப் போகும் தொகுதி இதுவா?

2024 தேர்தலில் கோவையில் போட்டியிட்டு தோற்றார் அண்ணாமலை. இருப்பினும், மற்ற மாவட்டங்களை விட கோவையில் அவருக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதால் அப்பகுதியிலேயே வரும் தேர்தலில் அவரை களமிறக்க டெல்லி பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதன்படி, கோவை சிங்காநல்லூர் (அ) வடக்கு தொகுதியில் அண்ணாமலையை களமிறக்க ஆலோசனை நடப்பதாக பேசப்படுகிறது. இதை தவிர காங்கேயத்திலும் களமிறங்க வாய்ப்பு என கூறப்படுகிறது.
News January 12, 2026
முன்னாள் முதல்வர், கவர்னரின் மனைவி காலமானார்

ஆந்திராவின் EX CM, TN EX கவர்னர் ரோசய்யாவின் மனைவி சிவலட்சுமி(86) உடல்நலக்குறைவால் காலமானார். ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 2011 முதல் 2016 வரை ரோசய்யா TN கவர்னராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
News January 12, 2026
தோல்வியால் துவண்டு உள்ளீர்களா? இதை படியுங்கள்..

விவேகானந்தரின் பிறந்தநாளில் அவரின் போதனைகளை கேளுங்க *தோல்வியைக் கண்டு ஏமாறாதே. வெற்றி முடிவல்ல, தோல்வி இறுதிப் படி அல்ல *ஒரு யோசனையை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஒரு யோசனையை வாழ்க்கை ஆக்குங்கள், அதை நினைத்துப் பாருங்கள், கனவு காணுங்கள், அந்த எண்ணத்தில் வாழுங்கள். உடலின் ஒவ்வொரு பகுதியும் அந்த எண்ணத்தால் நிறைந்திருக்கட்டும், மற்ற யோசனைகளை விட்டுவிடுங்கள். இதுவே வெற்றிக்கான வழி. SHARE IT.


