News February 11, 2025

ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஹலாசனம்

image

☆முதுகெலும்பு வலிமை பெறும். ☆ஞாபக சக்தி அதிகரிக்கும். ☆15-20 வினாடிகள் இந்த ஆசனத்தை செய்யலாம். ☆சிறுநீரகம், கணையம் போன்ற உள்ளுறுப்புகள் பலம் பெறும். ☆வாயுக்கோளாறுகளை போக்குகிறது. ☆நரம்பு தளர்ச்சி வராமல் பாதுகாக்கும். ☆மாதாவிடாய் & கர்ப்ப காலங்களில் இந்த பயிற்சி செய்ய கூடாது.

Similar News

News February 11, 2025

விஜய் தேவரகொண்டாவிற்கு வாய்ஸ் கொடுக்கும் சூர்யா

image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 12ஆவது படத்தின் தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நாளை டீசர் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிற மொழி படங்களுக்கு சூர்யா வாய்ஸ் கொடுப்பது இது முதல்முறை அல்ல. முன்னதாக, மணி ரத்னம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் நடித்த ‘குரு’ படத்திற்கும், சூர்யா தமிழ் டப்பிங் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News February 11, 2025

IITகளில் மீண்டும் அநீதி: மதுரை எம்பி

image

IITகளில் முனைவர் படிப்பில் 560 OBC, SC, ST மாணவர்களின் இடங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் MP குற்றஞ்சாட்டியுள்ளார். இடஒதுக்கீடு மூலம் மாணவர்கள் பெற்ற அனுமதி விவரங்களை துறை வாரியாக வெளியிடுமாறு நாடாளுமன்றத்தில் கேட்டதாகவும், அதற்கு மத்திய அமைச்சர் மழுப்பலாக பதில் கூறியதாகவும் தெரிவித்துள்ள அவர், அமைச்சர் தந்த அரைகுறை விவரங்களைக் கொண்டே 590 இடங்கள் பறிபோனது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.

News February 11, 2025

இன்று ப்ராமிஸ் டே: நீங்க என்ன ப்ராமிஸ் கொடுக்க போறீங்க?

image

‘நான் உன் கூட நூறு வருஷம் வாழணும்’ என்ற வார்த்தையில் இருக்கும் பிணைப்பு தான் காதலின் அடிநாதமாக உள்ளது. பிப்.11 இன்று Valentine வாரத்தில் Promise day. எந்த ஒரு சூழலிலும், நான் உன்னை விட்டு பிரிய மாட்டேன் என சொல்வதில் தொடங்கி காதல் முழுவதும் நம்பிக்கையால் உருவானது. யார் வேணாலும் வாக்குறுதி கொடுக்கலாம். ஆனால், அதை காப்பாற்றுவதில் தான் காதலின் ஆழம் இருக்கிறது. நீங்க என்ன ப்ராமிஸ் கொடுக்க போறீங்க?

error: Content is protected !!