News February 12, 2025

கடுப்பான விமானப்படை தளபதியை Cool செய்த HAL

image

2021ல் ஆர்டர் செய்யப்பட்ட 83 தேஜஸ் Mk1A போர் விமானங்கள் விரைவில் விமானப்படைக்கு டெலிவரி செய்யப்படும் என பொதுத்துறை நிறுவனமான HAL உறுதியளித்துள்ளது. போர் விமானங்களுக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்து அதிருப்தியடைந்த விமானப்படை தளபதி ஏபி சிங், HAL மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக கூறிய நிலையில், அந்நிறுவனம் தற்போது விளக்கமளித்துள்ளது. தொழில்நுட்ப சிக்கல்களே தாமதத்திற்கு காரணம் என HAL கூறியுள்ளது.

Similar News

News March 10, 2026

நாமக்கல்: உங்களிடம் ரேஷன் கார்டு உள்ளதா?

image

நாமக்கல் மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News March 10, 2026

விஜய்யுடன் கூட்டணி.. DCM பதவி கேட்கிறாரா சசிகலா?

image

எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தும் நோக்கில் புதிய கட்சியை தொடங்குவதாக கூறிய சசிகலா, வரும் தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைக்க முனைப்பு காட்டுகிறார். சசிகலாவின் உறவினரான ஜெய் ஆனந்த், தவெகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் போட்டியிட கணிசமான தொகுதிகளுடன், DCM பதவியையும் தவெகவிடம் டிமாண்டாக சசிகலா தரப்பு வைத்துள்ளதாம். இதுபற்றி விஜய் ஆலோசிக்கிறாராம்.

News March 10, 2026

நாளை அனைத்து பள்ளிகளுக்கும்… பறந்த உத்தரவு

image

+2 பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், நாளை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இதனையொட்டி, பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு சென்றுள்ளது. அதன்படி, *பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அம்மை நோய் இருப்பின் அவர்களை தனி அறையில் தேர்வெழுத வைக்க வேண்டும். *அறை கண்காணிப்பாளராக செல்லும் ஆசிரியர்கள் அந்த பாடத்தை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக இருக்கக் கூடாது.

error: Content is protected !!