News April 16, 2025
ஹஜ் பயணம் – பிரதமருக்கு CM ஸ்டாலின் கடிதம்

தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து குறித்து பிரதமர் மோடிக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் ஹஜ் புனிதப் பயணத்திற்கு ஆவலுடன் தயாராகி வரும் தமிழகம் உட்பட ஆயிரக்கணக்கான இந்திய இஸ்லாமியர்களுக்கு இந்த செய்தி மிகுந்த வருத்தத்தை உண்டாக்கி உள்ளதாக அவர் தெரிவித்தார். சவுதி அரசிடம் இதுகுறித்து பேசி தீர்வு காண வேண்டும் எனவும் CM ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
Similar News
News November 22, 2025
இயற்கை விவசாயிகள் நடத்தும் மரபுச் சந்தை!

கிருஷ்ணகிரி, கட்டையான பல நூலக மைதானத்தில் நாளை (நவ.23) இயற்கை விவசாயிகள் நடத்தும் 194வது மரபுச் சந்தை நடைபெற உள்ளது. இதில் பாரம்பரிய அரிசி வகைகள், தானியங்கள், பசு நெய், தேன், அவல், ஊறுகாய், சிறு தானியங்களால் செய்த கேக், மருந்தில்லாமல் விளையும் காய்கறிகள் அனைத்தும் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
News November 22, 2025
உலக VVIP-கள் கூடும் திருமணம்: யார் இந்த ராமராஜு?

டிரம்ப்பின் மகன் உள்ளிட்ட உலக பிரபலங்களே நேரில் வந்து வாழ்த்த, உதய்ப்பூர் பங்களாவில் தடபுடலாக தனது மகளின் திருமணத்தை நடத்துகிறார் தொழிலதிபர் ராமாராஜு. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Ingenus Pharmaceuticals நிறுவனத்தின் தலைவர் தான் ராமராஜு. அமெரிக்க மருத்துவ துறையில் இவர் நன்கு பரிச்சயமானவர். இவரது நிறுவனம் உலகின் பல நாடுகளில் கிளை பரப்பியுள்ளது.
News November 22, 2025
தமிழகத்தின் மூத்த கவிஞர் தமிழன்பன் காலமானார்

சாகித்ய அகாடமி விருது வென்ற தமிழகத்தின் மூத்த கவிஞர் தமிழன்பன்(92) காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உயிர் பிரிந்தது. ஈரோடு சென்னிமலையில் பிறந்த அவர், ஓவியர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர் ஆவார். சென்னை தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ள அவர், தமிழில் எண்ணற்ற கவிதை தொகுப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார். RIP


