News May 9, 2024
நடப்பு ஆண்டிற்கான ஹஜ் பயணம் தொடக்கம்

டெல்லியில் இருந்து ஹஜ் பயணிகளின் புனித பயணம் இன்று முதல் தொடங்கியது. இந்தாண்டு சவுதி அரேபியாவுக்கு சுமார் 1.75 லட்சம் பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை புறப்பட்ட முதல் விமானத்தில் 285 பயணிகள் ஹஜ்ஜிற்கு புனித பயணம் மேற்கொண்டுள்ளனர். அதற்கு முன்னதாக, ஜெட்டா மற்றும் மதீனா நகரங்களில் ஹஜ் பயணித்திற்கான ஏற்பாடுகள் மறு ஆய்வு செய்யப்பட்டது.
Similar News
News November 20, 2025
கர்ப்பிணிகளுக்கு ₹11,000 கொடுக்கும் அரசு திட்டம்

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ், முதல்முறையாக கர்ப்பிணியாகும் பெண்களுக்கு ₹11,000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற பட்டியலின/பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹8 லட்சத்திற்கு மிகாமல் இருக்கணும். 2 தவணைகளாக வழங்கப்படும் இந்த தொகையை PMMVY.WCD.GOV.IN-ல் விண்ணப்பித்து பெறுங்கள். SHARE.
News November 20, 2025
கமிஷன், கரப்ஷனால் ஓடும் நிறுவனங்கள்: அன்புமணி

அமைச்சர் <<18335968>>TRB ராஜா<<>>வின் அறிக்கை மூலம், புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 23% முதலீடுகள் கூட முழுமையாக வரவில்லை என்ற உண்மை வெளிவந்துள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார். DMK அரசின் கமிஷன், கரப்ஷனை தாங்க முடியாததால் தான், தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை திரும்பி பார்க்காமல் ஓடுவதாக அவர் விமர்சித்துள்ளார். 2026-ல் பாமக அங்கம் வகிக்கும் ஆட்சியில் தொழில் முதலீடுகள் தேடி வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 20, 2025
GV பிரகாஷின் கரியரில் இதுதான் பெஸ்ட் பாடலா?

‘பராசக்தி’ படத்தின் 1st சிங்கிள் ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விரைவில் 2-வது சிங்கிள் வெளியாக உள்ளதாக இசையமைப்பாளர் GV பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார். சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் ஆகிய இருவருடனும் GVP, 2-வது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். இந்நிலையில், 2nd சிங்கிள் தன்னுடைய கரியரின் சிறந்த பாடல்களில் ஒன்றாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


