News August 14, 2024
ஹஜ் யாத்திரை விண்ணப்பப்பதிவு தொடக்கம்

அடுத்தாண்டு ஹஜ் யாத்திரை செல்ல விரும்புவோருக்கு விண்ணப்பப்பதிவு ஆன்லைனில் தொடங்கியுள்ளது. இதற்கு செப்.9 வரை விண்ணப்பிக்கலாம். முதல்முறையாக இந்தாண்டில் https://hajcommittee.gov.in/ இணையதளத்துடன் சேர்த்து, HAJ Suvidha APP என்ற பிரத்யேக செயலி மூலமாகவும் விண்ணப்பப் பதிவு நடைபெறுகிறது. 2025ம் ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு இந்தியாவுக்கு 1,75,025 இடங்களை சவூதி அரேபியா ஒதுக்கியுள்ளது.
Similar News
News November 19, 2025
இதெல்லாம் நாங்க அப்பவே பண்ணிட்டோம்..!

ராஜமௌலியின் ‘வாரணாசி’ படத்தை இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆனால், அண்மையில் வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவில் கிராபிக்ஸ் நன்றாக இல்லை என SM-ல் பலரும் பதிவிட்டு வருகின்றனர். கிராபிக்ஸ் காளையில் மகேஷ் பாபு வரும் காட்சியை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள், இதெல்லாம் கமல் 1997-ல் (மருதநாயகம்) ஒரிஜினலாகவே செய்துவிட்டதாக குறிப்பிடுகின்றனர். உங்களுக்கு ‘வாரணாசி’ கிளிம்ப்ஸ் பிடிச்சிருந்ததா?
News November 19, 2025
தேர்தல் வெற்றிக்கு ₹40,000 கோடி செலவா?

பிஹாரில் NDA கூட்டணி மீதான பிரசாந்த் கிஷோரின் குற்றச்சாட்டுகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் முதல் தேர்தல் அறிவிப்பு வரை சுமார் ₹40,000 கோடிக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டதாகவும், உலக வங்கி உதவியுடன் ₹14,000 கோடி அளவுக்கு திட்டங்களுக்கு பணம் திருப்பி விடப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். தேர்தலுக்கு ஒருநாள் முன்புவரை கூட பெண்களின் வங்கிக் கணக்கில் ₹10,000 செலுத்தப்பட்டதாக விமர்சித்துள்ளார்.
News November 19, 2025
ராசி பலன்கள் (19.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


