News February 13, 2025

முயல் ரத்தத்தில் ஹேர் Oil: 3 கடைகளுக்கு சீல்

image

ஈரோட்டில் முயல் ரத்தத்தால் Hair Oil தயாரித்து விற்பனை செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. சட்டவிரோதமாக இந்த எண்ணெய் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்று வருவதாக மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அழகு சாதனப் பொருட்களை விற்கும் 3 கடைகளை கண்டறிந்து சீல் வைத்துள்ளனர்.

Similar News

News February 13, 2025

வங்கதேச கலவரத்தில் 1,400 பேர் சாவு.. ஐ.நா. தகவல்

image

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக கடந்தாண்டு போராட்டம் வெடித்தது. அதை கட்டுப்படுத்த ஷேக் ஹசீனா அரசு எடுத்த நடவடிக்கையால், பல இடங்களில் கலவரம் வெடித்தது. இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இந்த கலவரம் குறித்து ஐநா மனித உரிமை கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கலவரத்தில் ஏறத்தாழ 1,400 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.

News February 13, 2025

அஜித்தின் அடுத்த படம்: ரசிகர்களுக்கு வேண்டுகோள்

image

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் தெறி ஹிட் அடித்திருக்கும் நிலையில், அவரது அடுத்த படமான ‘குட் பேட் அக்லி’ விரைவில் திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரான சுப்ரீம் சுந்தர் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு வரும் ரசிகர்கள், விக்ஸ் அல்லது ஹால்ஸ் உடன் தான் போக வேண்டும். இல்லையெனில், கத்தி கத்தி தொண்டை வலி வந்துவிடும் எனக் கூறியுள்ளார்.

News February 13, 2025

Kiss பண்ணால் இப்படியாகுமா…

image

அன்புடன் முத்தமிடும் போது ஆக்சிடோசின், டோபமைன் மற்றும் செரடோனின் ஹார்மோன்களை மூளை சுரக்கிறது. இது மகிழ்ச்சியையும் திருப்தி உணர்வையும் ஏற்படுத்துகிறது. இதனால் பாசப் பிணைப்பும் வலுவடைகிறது. அதேநேரம், மன அழுத்தம் குறைகிறது. காதலர்கள், தம்பதியர் முத்தமிட்டுக் கொள்ளும் போது, பாலுணர்வை தூண்டும் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. இதனால் தாம்பத்ய இன்பம் அதிகரிப்பதுடன், காதலும் பிணைப்பும் வலுப்படுகிறது.

error: Content is protected !!