News September 19, 2025
முடி கொட்டுதா? இந்த சீப்பை யூஸ் பண்ணுங்க

சரியான சீப்பை பயன்படுத்தவில்லை என்றால் கூட முடி உதிர்வு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். உங்களுக்கான சரியா சீப்பு எது என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள். ➤சுருள் முடி – Wooden comb ➤மென்மையான முடி – boar bristle hair brush ➤அடர்த்தியான மற்றும் நார் போன்ற முடி – Boar + Nylon Pin கொண்ட Hairbrush ➤நீண்ட & நேரான கூந்தலுக்கு – Paddle HairBrush. இந்த தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News September 19, 2025
சாராய பணத்தில் திமுகவின் விழா: அண்ணாமலை

சாராயம் விற்ற பணத்தில் திமுகவின் முப்பெரும் விழா நடத்தப்பட்டதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். கரூரில் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலின் யாருக்கு திருடர், ஊழல்வாதி பட்டம் கொடுத்தாரோ (செந்தில் பாலாஜி) அவரை வைத்தே இன்று முப்பெரும் விழா நடத்தியிருப்பதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டினார். மேலும், தமிழகத்தில் திமுகவுக்கு காங்கிரஸ் எடுபிடி வேலை செய்வதாக சாடினார்.
News September 19, 2025
கணவர், BF ஏமாற்றுகிறாரா? தெரிந்துகொள்ள 3 கேள்விகள்

திருமண உறவிலும் காதல் உறவிலும் விரிசல் விழ முக்கிய காரணமே ஏமாற்றுதல் (அ) சந்தேகித்தல் தான். 3 எளிய கேள்விகளை கேட்பதால் ஓரளவு உண்மையை கணிக்க முடியும் என்கின்றனர் மனநல நிபுணர்கள்: 1)ஏன் லேட்டு? இந்த கேள்விக்கு பின் அவர்களின் முகமே சிக்க வைத்துவிடும். 2)உங்கள் போனை பார்க்கலாமா? பதில்சொல்ல தயங்கினால் யோசிக்கவும். 3)உங்கள் வாழ்வில் வேறு யாரும் உண்டா? இதற்கு திருதிரு என முழித்து சிக்கியே விடுவார்கள்.
News September 19, 2025
அனைத்து பள்ளிகளிலும் புதிய மாற்றம்!

பெற்றோர் – ஆசிரியர் சங்க நிர்வாகியாக தற்போது பயிலும் மாணவர்களின் பெற்றோர்களே நிர்வாகியாக இருக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. படித்து முடித்து வெளியேறிய மாணவர்களின் பெற்றோர்கள் நிர்வாகியாக இருக்கக் கூடாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.