News February 24, 2025
விஜய் முதல்வராக வேண்டி முடி காணிக்கை

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வெற்றிக்கான கூட்டணிக் கணக்கை போடத் தொடங்கியிருக்கின்றன. இதில் புதிதாக உதயமான தவெக கட்சி தொண்டர்களும் தங்களது கட்சி வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். அதன் ஒருபகுதியாக விஜய் முதல்வராக வேண்டி, மதுரை அழகர்கோயிலில் உள்ள 18ம் படி கருப்பசாமிக்கு முடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.
Similar News
News February 24, 2025
நகல் என்றுமே அசல் ஆக முடியாது: அண்ணாமலை

TNல் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில், 1000 முதல்வர் மருந்தகங்களை CM ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிலையில், மத்திய அரசின் மக்கள் மருந்தகத்தை TN அரசு காப்பியடித்துள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். அத்துடன், நகல் என்றுமே அசல் ஆக முடியாது என முதல்வர் மருந்தகம் குறித்து கிண்டலாக பதிவிட்டுள்ள அவர், தேர்வில் காப்பி அடிப்பது போன்ற மீம்ஸையும் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
News February 24, 2025
ரூ.2000 வந்தாச்சு… உடனே செக் பண்ணுங்க

விவசாயிகளுக்கான PM Kisan உதவித் தொகையின் 19-வது தவணையை, இன்று பிஹாரில் பாகல்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி விடுவித்தார். நாடு முழுவதும் உள்ள 9.8 கோடி விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.22,000 கோடி தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை பெற தகுதியான விவசாயிகள், தங்கள் வங்கிக் கணக்கில் KYC கட்டாயம் அப்டேட் செய்திருக்க வேண்டும். உங்கள் கணக்கை உடனே செக் பண்ணுங்க.
News February 24, 2025
VJS படத்தில் இணைந்த சீரியல் நடிகை

விஜய்சேதுபதி நடிப்பில் பாண்டியராஜ் இயக்கி வரும் படத்தில், சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் லீட் ரோலில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது. யோகிபாபு, மலையாள நடிகர் செம்பன் வினோத் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். கிராமத்து கதையம்சமாக இப்படம் உருவாகி வருகிறது.