News June 20, 2024
EVM இயந்திரங்களை ஹேக் செய்வது சாத்தியமில்லை

இந்தியாவில் பயன்படுத்தப்படும் எம்3 மாடல் இவிஎம் இயந்திரங்களை ஹேக் செய்வது சாத்தியமில்லை என குஜராத் ஐஐடி இயக்குநர் ரஜத் விளக்கமளித்துள்ளார். இவிஎம்களை இணையம், புளூடூத் போன்ற மற்ற சாதனங்களுடன் இணைக்க முடியாது என்பதால், மென்பொருள் மற்றும் நிரல்களை ஏற்ற முடியாது எனக் கூறியுள்ளார். மேலும், யாராவது அதை சேதப்படுத்தினால், தானியங்கி செயல்பாடுகள் அதை உடனடியாக சரிசெய்யும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 12, 2025
4 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை

மயிலாடுதுறை, நாகை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று(செப்.12) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் IMD ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் இன்றும், நாளையும் 60 KM வேகத்தில் காற்று வீசும் எனவும் கூறப்பட்டுள்ளது.
News September 12, 2025
Health Tips: இத தினமும் பண்ணா முதுகுவலிக்கு BYE சொல்லலாம்

முதுகு வலி இருப்பவர்கள் சில உடற்பயிற்சிகளை செய்தால், அது மேலும் வலியை அதிகரிக்க செய்யும். அதனால் எந்த உடற்பயிற்சி முதுகு வலியை நீக்கும் என தெரியாமல் தவிப்பர். இனி இந்த குழப்பம் வேண்டாம். தினமும் 78 நிமிடங்களுக்கு மேல் நடப்பவர்களுக்கு முதுகு வலி வருவதற்கான வாய்ப்பு 13% வரை குறைவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இதோடு, கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும் அவசியம். SHARE.
News September 12, 2025
அதிமுக கூட்டணியில் முக்கிய மாற்றம்.. பாஜக எடுத்த முடிவு!

டெல்லியில் முகாமிட்டுள்ள நயினார் நாகேந்திரன், NDA கூட்டணி, உள்கட்சி பூசல் தொடர்பாக அமித்ஷா, JP நட்டா, BL சந்தோஷ் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார். அதுமட்டுமல்லாமல் கூட்டணியில் இருந்து விலகிய OPS, TTV-யை டெல்லிக்கு அழைத்து பேச பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. ஆனாலும், ஒருங்கிணைப்பு விவகாரத்தில் EPS, திட்டவட்டமாக நோ சொல்லி வருவதால், அவரை சமாதானம் செய்யவும் ஒருபுறம் முயற்சிகள் நடந்து வருகிறதாம்.