News September 22, 2025
உடல் உறுப்புகளை காலி செய்யும் பழக்க வழக்கங்கள்

வயதானவர்களுக்கு வரும் நோய் பாதிப்புகள் இப்போது இளம் தலைமுறையினரையே வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு காரணம் நமது உணவு முறை மற்றும் பிற பழக்கம் வழக்கம்தான். நமக்கே தெரியாமல் நமது பழக்க வழக்கங்கள் பல உடல் உறுப்புகளுக்கு எமனாக மாறுகின்றன. அந்த தவறான பழக்க வழக்கங்கள் என்னென்ன என்பதை மேலே போட்டோஸாக கொடுத்துள்ளோம். ஒவ்வொன்றாக SWIPE செய்து அறிந்து கொள்ளுங்கள்.
Similar News
News September 22, 2025
இரவில் செங்கோட்டையனுடன் சந்திப்பு

ஒன்றுபட்ட அதிமுகவிற்காக குரல் கொடுத்து வரும் செங்கோட்டையனை நேற்று இரவு EX MLA பாலகங்காதரன் உள்ளிட்ட OPS ஆதரவாளர்கள் சந்தித்து பேசியுள்ளனர். ஓபிஎஸ் – செங்கோட்டையன் ஓரிரு நாள்களில் நேரில் சந்திக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதை உறுதி செய்யும் வகையில், இருதரப்பும் நேற்று ஆலோசனை செய்திருக்கின்றன. இதில், இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்திப்பது குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது.
News September 22, 2025
அஸ்வ சஞ்சலாசனம் செய்யும் முறை

முதுகுத்தண்டு வலுவடைய அஸ்வ சஞ்சலாசனம் செய்து பழகுங்கள் ➤விரிப்பில் நிற்கவும். ஒரு காலை முன்னோக்கி முட்டியை மடக்கியபடி வைக்கவும் ➤மற்றொரு காலை பின்னோக்கி எடுத்து சென்று, கால் முட்டி முதல் கால் விரல்கள் வரை தரையில் இருக்க வேண்டும் ➤கைகளை இடுப்புக்கு பின்புறம் வைக்கவும் ➤இந்தநிலையில், 15- 20 விநாடிகள் வரை இருந்துவிட்டு, மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். இதே போன்று, காலை மாற்றி செய்யவும். SHARE.
News September 22, 2025
விஜய்யின் கூட்டம் வாக்குகளாக மாறாது: செல்லூர் ராஜு

நடிகர்களின் அரசியல் செல்வாக்கை கூட்டத்தை வைத்து மதிப்பிட முடியாது என விஜய் குறித்து செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். சிவாஜி, பாக்யராஜ், டி ராஜேந்தருக்கு கூடிய கூட்டம் இப்போது அட்ரஸே இல்லாமல் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். விஜய் ரசிகர்களைப் பக்குவப்படுத்திக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கூட்டம் வாக்குகளாக மாறாது என்ற கருத்தை நேற்று கமலும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.