News May 14, 2024
எச்.ராஜா மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கடந்த 2018இல் சமூக வலைத்தளத்தில் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதில், பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பதிவிடவில்லை எனக்கூறிய எச்.ராஜாவின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் அவரது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
Similar News
News April 6, 2026
செல்வப்பெருந்தகை வடசென்னை செல்ல கட்டுப்பாடு

திரு.வி.க. நகர் தொகுதியில் பொற்கொடி களமிறங்கிய நிலையில், வட சென்னை முழுவதும் ஆம்ஸ்ட்ராங் படுகொலையுடன் செல்வப்பெருந்தகையை தொடர்புபடுத்தியும், திமுகவுக்கு எதிராகவும் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறதாம். இதுதொடர்பாக உளவுத்துறை ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இதனால், கொளத்தூர் உள்பட வட சென்னை பகுதிகளில் செல்வப்பெருந்தகை பிரசாரம் செய்ய வேண்டாம் என திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாம்.
News April 6, 2026
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. தேர்வு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை, நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று நடைபெறவிருந்த 1 – 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு வரும் 10-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று முதல் 5 நாள்கள் விடுமுறையாகும்.
News April 6, 2026
கூட்டணி கட்சிகளுக்கு டிமிக்கி கொடுத்ததா அதிமுக?

பாமகவுக்கு அதிக பலம் உள்ள தொகுதிகளைதான் அதிமுக ஒதுக்கியுள்ளதாக கே.பாலு கூறினார். வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள தொகுதிகளை அதிமுக ஒதுக்கியிருப்பதாக எழும் விமர்சனத்துக்கு பதிலளித்த அவர், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிற எந்தவொரு கட்சியாவது இதுபோன்று கூறியிருக்கிறதா என கேட்டார். மேலும், திமுகவில் தான் அப்படி நடந்துள்ளதாக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வருத்தப்படுவதாகவும் அவர் பேசினார்.


