News March 24, 2025
எச்.ராஜாவுக்கு மனநலம் சரியில்லை: சுப.வீ.,

சாதி ஆணவப் படுகொலைகளுக்கு சுப.வீரபாண்டியனும், திருமாவளவனும் தான் காரணம் என்று நேற்று எச்.ராஜா பேசியது பெரும் சர்ச்சையானது. இதுகுறித்து சுபவீ., எச்.ராஜாவுக்கு மனநலம் சரியில்லையோ என தோன்றுகிறது. அவர் நாகரிகமாக பேசினால்தான் ஆச்சரியம்; அநாகரிகமாக பேசி பேசியே அழிந்துவிட்டார் என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும், மனுநீதியால் ஏற்பட்ட சாதிய ஏற்றத்தாழ்வுகள் தான் ஆணவப் படுகொலைகளுக்கு காரணம் எனவும் சாடினார்.
Similar News
News November 2, 2025
மீண்டும் புயல் சின்னம்.. மழை பொளந்து கட்டும்

வங்கக் கடலில் நாளை(நவ.2) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக IMD கணித்துள்ளது. இன்று நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. இந்நிலையில், நாளை முதல் நவ.7-ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் 2 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் குடையை மறக்க வேண்டாம்!
News November 2, 2025
பிரபல இயக்குநரும் நடிகருமான வி.சேகர் கவலைக்கிடம்

90’s காலக்கட்டத்தில் வெளியான விரலுக்கேத்த வீக்கம் உள்ளிட்ட குடும்ப படங்களை இயக்கியவர் வி.சேகர். பள்ளிக்கூடம், எங்க ராசி நல்ல ராசி உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார். திடீர் நெஞ்சுவலி காரணமாக வி.சேகர் சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது தந்தை உயிருக்கு போராடி வருவதாகவும், அவரது உடல்நிலை சரியாக வேண்டிகொள்ளுங்கள் என்றும் மகன் கார்ல்மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.
News November 1, 2025
சற்றுமுன்: பிரபலம் காலமானார்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராஜேஷ் பானிக் (40) சாலை விபத்தில் உயிரிழந்தார். திரிபுராவை சேர்ந்த இவர் U-19 உலகக் கோப்பையில் இந்திய அணியில் விளையாடியுள்ளார். ரஞ்சி கிரிக்கெட் மற்றும் உள்நாட்டு முதல்தரப் போட்டிகளிலும் விளையாடியுள்ள இவர் சிறந்த ஆல்-ரவுண்டராகவும் திகழ்ந்தார். இவரது மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP


