News February 1, 2026
H.ராஜாவை நலம் விசாரித்த CM ஸ்டாலின்

பாஜக மூத்த தலைவர் <<19008405>>H.ராஜா<<>>, பக்கவாதத்தால் சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார். ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், H.ராஜாவின் உடல்நிலை குறித்து அறிய, உதயநிதியுடன் CM ஸ்டாலின் ஹாஸ்பிடலுக்கு சென்றார். மேலும், H.ராஜா குடும்பத்தினரை சந்தித்து சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.
Similar News
News February 6, 2026
BREAKING: நாளை Uber, Ola ஸ்டிரைக்!

நிலையற்ற ஊதியம் & விதிமுறைகளை அமல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை எதிர்த்து Uber, Ola, Rapido உள்ளிட்ட தளங்களின் டிரைவர்கள், நாளை (பிப்.7) நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். 2025-ம் ஆண்டே மோட்டார் வாகன வழிகாட்டுதல்கள் அமலுக்கு வந்திருந்தாலும், தளங்கள் தன்னிச்சையாக கட்டணங்களை நிர்ணயிப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன. எனவே, நாளை பஸ், ரயில் போன்றவற்றை பயன்படுத்திக்கோங்க மக்களே..
News February 6, 2026
விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது தேமுதிக

இன்னும் கூட்டணி முடிவை அறிவிக்காமல் சஸ்பென்ஸ் வைத்துக்கொண்டே செல்லும் தேமுதிக, இன்று முதல் விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பொதுத் தொகுதியில் போட்டியிட ₹15,000, தனித் தொகுதிக்கு ₹10,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பொதுத் தொகுதிக்கு ₹10,000, தனித் தொகுதிக்கு ₹5,000 செலுத்தி விருப்ப மனுக்களை பெறலாம். இதனால் கோயம்பேடு அலுவலகத்தில் கட்சியினர் நிறைந்துள்ளனர்.
News February 6, 2026
மாம்பழம் எங்களுக்கு தான்: ராமதாஸ்

பாமக, மாம்பழம் சின்னத்துக்காக அப்பா – மகன் கடுமையாக மோதி வருகின்றனர். இந்நிலையில், மாம்பழம் சின்னம் தங்களுக்குத்தான் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். கோர்ட்டில் தங்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வெளியாகும் என நம்பிக்கை தெரிவித்த அவர், கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதால் விரைவில் நல்ல செய்தி வரும் என கூறியுள்ளார். ஏற்கெனவே அன்புமணி (பாமக) அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


