News March 19, 2025
ஜிம்னாஸ்டிக்ஸ் ஜாம்பவான் காலமானார்

உலக ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் தனியிடம் பெற்றவர் ஜப்பானை சேர்ந்த அகினோரி நகாயாமா(83). 1968 ஒலிம்பிக்கில் 4 தங்கம், 1972 ஒலிம்பிக்கில் 2 தங்கம், மேலும் 2 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்கள் வென்ற நகாயாமா, உலக சாம்பியன் போட்டிகளிலும் 6 தங்கம் உள்பட 12 பதக்கங்கள் வென்றவர். ஜப்பான் ஜிம்னாஸ்டிக்ஸின் அடையாளமாக இருந்த அவர், இரைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. RIP
Similar News
News March 19, 2025
ஏப்.1 முதல் UPI கணக்குகள் முடக்கம்!

ஏப்ரல் 1 முதல் சில அதிரடி நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ளவுள்ளன. அந்த வகையில், GPAY, PHONEPE, PAYTM போன்ற UPI ஆப்களுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்கள் நீண்டகாலமாக செயல்படாமல் இருந்தால், அந்த UPI கணக்குகள் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, UPI உடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்கள் பயன்பாட்டில் உள்ளதா என்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 19, 2025
நாய்க்கடியால் உயிரிழந்தால் இழப்பீடு: அரசு அறிவிப்பு

நாய்க்கடியால் உயிரிழப்பு ஏற்பட்டால், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்க CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, நாய்க்கடியால் மாடு இறந்தால் ₹37,500, ஆடு இறந்தால் ₹6,000, கோழி இறந்தால் ₹200 இழப்பீடு வழங்கப்படும் என்றார். இதுவரை தெருநாய் கடித்து உயிரிழந்த 1,149 பிராணிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
News March 19, 2025
சாஹல்- தனஸ்ரீ விவாகரத்து வழக்கில் நாளை தீர்ப்பு

சாஹல்- தனஸ்ரீ விவகாரத்து வழக்கில் குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்க மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்து திருமணச் சட்டத்தின் கீழ், சமரச காலத்தை தள்ளுபடி செய்ய குடும்ப நல நீதிமன்றம் மறுத்த தீர்ப்பை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. மேலும், சாஹல் ஐபிஎல்லில் பங்கேற்க வேண்டும் என்பதால், இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கவும் ஆணையிட்டுள்ளது. கடந்த 2020ல் இவர்களுக்கு திருமணமானது.