News May 13, 2024

மனைவி சைந்தவியை பிரிந்த ஜி.வி.பிரகாஷ்

image

சைந்தவியும், நானும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம் என நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தங்களது 11 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தாங்கள் இருவரும் சேர்ந்தே இந்த மாதிரியான ஒரு முடிவை எடுத்ததாகக் கூறிய அவர், இந்த கடினமான நேரத்தில் அனைவரது ஆதவும் தேவை என கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News April 6, 2026

பிரசாரத்தை ரத்து செய்த விஜய்.. கடைசி நேர அறிவிப்பு!

image

சென்னையில் இன்று விஜய் மேற்கொள்ளவிருந்த பிரசார கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம், தி.நகரில் விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி கோரப்பட்டது. ஆனால், வில்லிவாக்கம், தி.நகரில் தலா 1 மணி நேரம் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அது குறைவான நேரம் எனக் கூறி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் முறையிட விஜய் முடிவு செய்துள்ளாராம்.

News April 6, 2026

அண்ணாமலை-நயினார் மோதலா? H.ராஜா Open Talk

image

நயினாருடன் மோதல் இருந்ததால்தான் அண்ணாமலைக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கவில்லை என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த H.ராஜா, பாஜகவுக்​குள் சண்டையை ஏற்படுத்தவே இப்படியான தகவல்கள் பரப்பப்படுவதாக கூறினார். அண்ணாமலை கடந்த தேர்​தலில் போட்​டி​யிட்​டார். தற்போது போட்டியிடவில்லை அவ்வளவுதான் வேறு ஒன்றுமில்லை எனவும் தெரிவித்தார். <<-se>>#TNElection2026<<>>

News April 6, 2026

₹40,000 சம்பளம், 667 காலியிடங்கள்.. இன்றே கடைசி!

image

மத்திய அரசின் கீழ் செயல்படும் மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் 667 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மைனிங், சர்வேயர் உள்ளிட்ட பணிகளுக்கு +2, டிப்ளமோ கல்வித்தகுதி போதுமானது. ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ₹40,000-க்கு மேல் சம்பளம் வழங்கப்படும். 18-30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த <>லிங்க்கில்<<>> ஏப்.6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். SHARE.

error: Content is protected !!