News May 1, 2024
ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார் குரு

கிருத்திகை நட்சத்திரம் 1ம் பாதம் மேஷம் ராசியில் இருந்து, கிருத்திகை நட்சத்திரம் 2ம் பாதம் ரிஷபம் ராசிக்குப் பெயர்ச்சி அடைந்தார் குரு பகவான். இதனால் 12 ராசிகளுக்கும் அவரவர் ராசி, நட்சத்திரங்களின் அடிப்படையில் இன்ப, துன்பங்களை அவர் வழங்க உள்ளார். இதன் மூலம் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், சம்பந்தப்பட்ட ராசியினர் அதற்கான பூஜை, பரிகாரங்களை செய்வதன் அடிப்படையில் நற்பலன்களை பெறலாம்.
Similar News
News March 13, 2026
தமிழக தேர்தல் தேதி.. வெளியானது BIG UPDATE

தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதிகளை நாளை மறுநாள்(மார்ச் 15) அறிவிக்க ECI திட்டமிட்டுள்ளதாம். நாளையுடன் PM மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன. இதனையடுத்து, தேர்தல் தேதியை CEC ஞானேஷ் குமார் அறிவிக்க உள்ளார். தமிழகத்திற்கு ஏப்.23-ம் தேதியன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் மே முதல் வாரத்தில் வாக்கு எண்ணிக்கை நடக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News March 13, 2026
விஜய்யை விளாசிய நடிகை ரஞ்சனா நாச்சியார்

தவெகவில் இருந்தபடியே, நடிகை ரஞ்சனா நாச்சியார் விஜய்யை சாடி வருகிறார். நேற்று தவெக ஆர்ப்பாட்டத்தில், நாம் ஆட்சிக்கு வந்தால் நமது மா.செ.,க்கள் மீதான FIR-களை delete செய்து விடுவோம் என ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார். மேலும், நீங்கள்(விஜய்) CM ஆக விரும்பினால், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க வேண்டும் (அ) சரியான அரசியல் அறிவு இருப்பவர்களை அனுப்ப வேண்டும் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
News March 13, 2026
கேஸ் சிலிண்டர்.. அரசின் புதிய அறிவிப்பு வெளியானது

சமையல் சிலிண்டர்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதால் மக்கள் பீதியடைய வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், இதுதொடர்பான செய்திகள் வெளியிடும் டிவி சேனல்கள் ஒரே வீடியோ/போட்டைவை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாமல், தேதி & நேரத்துடன் ஒளிபரப்ப வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், மாநில அரசுகள் மாவட்ட அளவில் சிலிண்டர் விநியோகத்தை கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.


