News October 3, 2024
குரு தோஷம் நீங்க இதை செய்யுங்கள்!

ஒருவரின் ஜாதகத்தில் குரு உக்கிர கிரகமாக இருந்தாலோ, கோசார ரீதியாக கெட்டவரானாலோ குரு தோஷம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதை போக்க வியாழக்கிழமை விரதம் இருந்து ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலின் தீர்த்த குளத்தில் நீராடி, பிருகஸ்பதிக்கு விரதமிருந்து, மஞ்சள் நிற வஸ்திரம் & வெண் முல்லை சாற்றி, கொண்டைக்கடலை மாலை அணிவித்து, 24 தீபங்களை ஏற்றி, குரு காயத்ரி பாடி வழிபட்டால் குரு தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
Similar News
News April 25, 2025
KTK முன்னாள் அமைச்சர் ராமையா காலமானார்

கர்நாடக (KTK) காங்கிரஸ் EX அமைச்சரும், சிருங்கேரி தொகுதி EX MLAவுமான பெகனே ராமைய்யா (90) காலமானார். 1978-ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற அவர், குண்டுராவ் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார். இதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு இருந்த ராமைய்யா (ராகுலுடன் கை குலுக்குபவர்), ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று மதியம் அவர் காலமானார். RIP.
News April 25, 2025
பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

மார்ச் 2024-ல் ₹2 குறைந்த பெட்ரோல், டீசல் விலை இன்று வரை ₹100.80, ₹92.39 என்றே தொடர்கிறது. ஆனால், கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு $70-க்கும் கீழ் குறைந்துள்ளது. இருப்பினும், எரிபொருள்களின் விலை குறையாததற்கு இந்திய ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு அதிகரிப்பதும் காரணமாக உள்ள நிலையில், உள்நாட்டு வரிகள், கமிஷன்கள், தேவைகள் ஆகியவையும் காரணிகளாக உள்ளன. எப்போதுதான் பெட்ரோல், டீசல் விலை குறையுமோ?
News April 25, 2025
தொடர்ந்து கடைசி ஓவர்களில் பேட்டிங்கில் சொதப்பும் RR!

கடைசி 3 மேட்ச்சில் RR சொற்ப ரன்களை இறுதி கட்டத்தில் சேஸ் செய்ய முடியாமல் தோற்றுள்ளது. DC, LSG அணிகளுக்கு எதிரான மேட்ச்களில் கடைசி ஓவரில் , 9 ரன்களை அடிக்க முடியாமல் தோற்று போனது. அதே போலதான், நேற்றும் 12 பந்துகளில் 18 ரன்களை அடிக்க முடியாமல் 11 ரன்களில் தோல்வியடைந்தது. ஏற்கனவே, RR மீது மேட்ச் ஃபிக்சிங் குற்றச்சாட்டு வேறு எழுந்துள்ளது. ஏன் இப்படி தடுமாறுகின்றனர் என நீங்க நினைக்கிறீங்க?