News August 29, 2024

பண வரவை அதிகரிக்க செய்யும் குரு பகவான்

image

குருவருள் இருந்தால்தான் திருவருளைப் பெறலாம் என்பது ஆன்றோர் வாக்கு. நவக்கிரக வரிசையில் வடக்கு பார்த்து அமர்ந்திருக்கும் தேவர்களின் ஆசானான குரு பகவானுக்கு விரதமிருந்து, சென்னை பாடியில் அமைந்துள்ள வலிதாய நாதர் கோயிலுக்குச் சென்று, அபிஷேகம் செய்து மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி, நெய் தீபமேற்றி, கொண்டைக்கடலை நைவேத்தியம் படைத்து, குரு காயத்ரி மந்திரம் சொல்லி வணங்கினால், பண வரவு அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

Similar News

News July 7, 2025

கிருஷ்ணகிரியில் நாளை மின் தடை 1/2

image

கிருஷ்ணகிரியில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக முக்கிய இடங்களில் நாளை (ஜுலை.08) மின் தடை ஏற்பட உள்ளது. அதன்படி போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டப்பள்ளி, கோட்டப்பட்டி, வடமலம்பட்டி, பன்னந்தூர், மஞ்சமேடு, சாமண்டபட்டி, பரியப்பறையூர், வண்டிக்காரன்கோட்டை. பரந்தூர், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், <<16972858>>தொடர்ச்சி<<>> ஷேர் பண்ணுங்க

News July 7, 2025

மீண்டும் சிக்குகிறார் செந்தில் பாலாஜி

image

2021-23-ல் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் ₹397 கோடி முறைகேடு நடந்ததாக, அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது அறப்போர் இயக்கம் வழக்கு தொடுத்தது. இந்நிலையில் வழக்கு பதிவு செய்வது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்வதாக தமிழக அரசு கோர்ட்டில் தெரிவித்தது. அப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டால், மீண்டும் ED உள்ளே வரலாம் எனவும் அது கைது வரை கூட நீள வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

News July 7, 2025

அம்மன் சென்டிமென்ட்.. ஆட்டத்தை தொடங்கும் இபிஎஸ்!

image

2026 தேர்தல் பரப்புரையை இபிஎஸ் இன்று தொடங்குகிறார். கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் உள்ள பிரசித்திபெற்ற வனபத்திரகாளியம்மன் ஆலயத்தில் இருந்து ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தை காலை 9 மணிக்கு தொடங்க உள்ளார். பின்னர் மாலை 4 மணிக்கு மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் உள்ள காந்தி சிலை அருகே ரோடு ஷோ நடத்தும் இபிஎஸ் இன்று மட்டும் 62 கி.மீ பயணம் செய்ய உள்ளார்.

error: Content is protected !!