News May 28, 2024
கொலை வழக்கில் இருந்து குர்மீத் ராம் ரஹீம் விடுதலை

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் கொலை வழக்கில் விடுதலையானார். 2002இல் தேரா அமைப்பின் ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றம் குர்மீத்துக்கு ஆயுள் தண்டனை விதித்த நிலையில், ஹரியானா உயர் நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்துள்ளது. எனினும், பாலியல் வன்கொடுமை வழக்கில் அவருக்கு ஏற்கெனவே 20 வருட தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 14, 2026
இன்று அனைத்து ரேஷன் கார்டுக்கும்… அரசு அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் இன்று நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. காலை 10 – மதியம் 1 மணி வரை வட்ட வழங்கல் அலுவலகங்களில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள தவறான குடும்பத் தலைவரின் போட்டோவையும் மாற்றிக் கொள்ளலாம்.
News March 14, 2026
விடாப்பிடியில் பாஜக.. என்ன செய்யப் போகிறார் EPS?

NDA கூட்டணி ஆட்சி கிடையாது, அதிமுகவே ஆட்சியில் அமர வேண்டும் என்ற கருத்தில் EPS விடாப்பிடியாக உள்ளாராம். இதற்கு குறைந்தது 160 தொகுதிகளில் அதிமுக தனித்து போட்டியிட வேண்டிய நிலை உள்ளது. ஆனால், அதிக தொகுதிகளை கேட்கும் பாஜக, அத்தொகுதிகளை தாங்களே பிற கட்சிகளுக்கு பிரித்தளிக்கிறோம் என்றும் கூறுகிறதாம். இது EPS-க்கு பிடிக்காததால் தான் அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறதாம்.
News March 14, 2026
தேமுதிகவால் விசிகவுக்கு வந்த சிக்கல்

தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுக்க நினைப்பதால், ஏற்கெனவே கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், விசிகவுக்கு தொகுதிகள் குறைக்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால், இதற்கு இருகட்சிகளும் இசைவு கொடுக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், திருமாவளவன் கேட்ட 10 தொகுதிகளில் 5 சீட் மட்டுமே கொடுக்க திமுக முடிவு செய்துள்ளதால், விசிகவினர் அதிருப்தியில் உள்ளனராம்.


