News March 17, 2024

துப்பாக்கி வைத்திருப்பவர்களா ? உடனே இதை செய்யுங்கள்!

image

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளன. அதன்படி மதுரை மாவட்டம் முழுவதும் 884 உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் துப்பாக்கியை ஒப்படைக்க மதுரை மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் உள்ளிட்ட தவிர்க்க முடியாத பாதுகாப்பு பணிக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 5, 2025

மதுரை மாவட்ட ரோந்து காவலர்கள் விபரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (04.04.2025) இரவு 10 மணி முதல் காலை 06 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாருக்கேனும் உதவி தேவைப்படின் இரவு ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசர உதவி ஏதேனும் தேவைப்பட்டால் 100 இல் தொடர்பு கொள்ளலாம்

News April 4, 2025

சிபிஐ(எம்) மாநாட்டில் பங்கேற்கும் பிரபலங்கள்

image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், நடிகர் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி மற்றும் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் பங்கேற்கும் மாநாட்டு கலை நிகழ்ச்சிகள் இன்று (ஏப்.04) மாலை 5 மணிக்கு மதுரை தமுக்கம் திறந்தவெளி அரங்கில் நடைபெறுகிறது. 

News April 4, 2025

மதுரை மாநகராட்சி பகுதியில் 1 லட்சத்திற்கு மேல் தெரு நாய்கள்

image

மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் சுமார் ஒன்றரை லட்சம் நாய்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், கருத்தடை செய்யாதது ஆண் பெண் நாய்கள் மாநகராட்சி எந்த மண்டலத்தில் அதிக நாய்கள் உள்ளன கட்டுப்படுத்தும் நடைமுறைகள் என்ன என்ற பல்வேறு தலைப்புகளில் கணக்கீடுகள் வழிமுறைகள் வகுக்கப்பட்டு பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. சில நாட்களில் விலாவாரியாக முழுமையான கணக்கிட்டு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

error: Content is protected !!