News April 6, 2025
குஜராத் அணிக்கு 153 ரன்கள் இலக்கு

நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் விளையாடி வருகின்றன. இதில், முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் பேட்ஸ்மேன் நிதிஷ்குமார் ரெட்டி அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். பவுலர்கள் சிராஜ் நான்கு விக்கெட்டுகளையும் பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Similar News
News April 9, 2025
தமிழக அரசுக்கு பா.ரஞ்சித் பாராட்டு

ஆளுநருக்கு எதிராக மாநில உரிமைகளைக் காக்க வழக்காடிய தமிழக அரசுக்கு பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய எல்லா தளங்களிலும் வேலை செய்துவரும் பாஜகவின் சர்வாதிகார சூழலில் சுப்ரீம் கோர்ட்டின் இன்றைய தீர்ப்பு நம்பிக்கை தருவதாகவும், ஆளுநர்களை எல்லாம் கண்டிக்கும் விதமாக தீர்ப்பு அமைந்திருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
News April 9, 2025
விசிக இருக்கும்வரை அது நடக்காது: திருமா

முஸ்லிம்களிடம் ₹1.25 லட்சம் கோடி சொத்து இருப்பதாக கூறும் பாஜகவிடம் இந்து, கிறிஸ்தவர்களிடம் சொத்து குறைவாக இருப்பதற்கான புள்ளி விவரம் இருக்கிறதா என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்துக்களை இந்துக்களாக உணர வைக்க முடியாததால், சிறுபான்மையினருக்கு எதிராக திசை திருப்புவதாகவும், திமுகவை வீழ்த்தி திராவிடத்தை வீழ்த்தலாம் என்ற அவர்களது கனவு விசிக இருக்கும் நடக்காது எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.
News April 9, 2025
IPL-ல் அதிவேக சதமடித்த 5 ஜாம்பவான்கள்

IPL-ல் அதிவேகமாக சதமடித்த 5 வீரர்கள் யார் யார் என பார்க்கலாம். 2013ல் கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் சதமடித்து முதலிடத்தில் உள்ளார். யூசுப் பதான் 37 பந்துகளிலும், மில்லர் 38 பந்துகளிலும் சதமடித்து 2-வது, 3-வது இடங்களில் உள்ளனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் டிராவிஸ் ஹெட் 39 பந்துகளில் சதமடித்து 4-வது இடத்தில் உள்ளார். பஞ்சாப் வீரர் பிரியான்ஸ் 39 பந்துகளில் சதமடித்து 5-வது இடத்தில் உள்ளார்.