News March 24, 2024
மும்பையை வீழ்த்தியது குஜராத்

MI அணிக்கு எதிரான ஆட்டத்தில் GT அணி அபார வெற்றி பெற்றது. அகமதாபாத் மைதானத்தில் நடந்த 4ஆவது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த GT அணி 20 ஓவரில் 168 ரன்கள் குவித்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய MI அணி 20 ஓவரில் 162 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இறுதியில் பந்துவீச்சாளர்கள் ரஷித், ஜான்சன் ஆகியோர் அபாரமாக பந்துவீச, மும்பை அணியை குஜராத் அணி வீழ்த்தியது.
Similar News
News October 25, 2025
GALLERY: உலகின் மிக அழகிய வண்ணமயமான பறவைகள்!

அழகின் மகிழ்ச்சியை கொண்டாட, உலகின் மிகவும் அழகான வண்ணமயமான பறவைகளை கொடுத்துள்ளோம். அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே கொடுக்கப்பட்டுள்ள போட்டோஸை வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும். இந்த லிஸ்ட்டில் இன்னும் என்ன பறவைகளை சேர்க்கலாம்.. கமெண்ட் பண்ணுங்க?
News October 25, 2025
ஆசியக் கபடிப் போட்டியில் அசத்திய தமிழக வீரர்!

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் தங்கம் வென்று மன்னார்குடியை சேர்ந்த இளம் வீரர் அபினேஷ் மோகன்தாஸ் அசத்தியுள்ளார். அவருக்கு அமைச்சர் TRB ராஜா பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில், ‘ஆசிய இளையோர் கபடிப் போட்டியில் தங்கம் வென்ற எங்கள் மின்னும் மன்னை வடுவூர் வீரர் அபினேஷ் மோகன்தாஸ்’ எனப் புகழாரம் சூட்டியுள்ளார். நாமும் வாழ்த்துவோம்..!
News October 25, 2025
பாஜக அபார வெற்றி

ஜம்மு காஷ்மீர் ராஜ்யசபா தேர்தலில், ஒரு இடத்தில் பாஜக வேட்பாளர் சத் பால் சர்மா சர்ப்ரைஸாக அபார வெற்றி பெற்றுள்ளார். அதுவும், சட்டமன்றத்தில் பாஜகவிற்கு இருக்கும் பலத்தை விட 4 வாக்குகள் கூடுதலாக பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளார். NC வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, பாஜகவிற்கு வாக்களித்து வெற்றிபெற செய்துள்ளனர். வாக்களித்தது ஆளும் கட்சியினரா, மாற்றுக்கட்சி MLAக்களா என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது.


