News April 14, 2025

இது என்ன படம்னு கண்டுபிடிங்க

image

போலீஸ் ஒருத்தரை எதிரிங்க கொன்னுடுறாங்க. அவர் மனைவிக்கும் விஷம் கொடுத்துடுறாங்க. அதனால, அவங்களுக்கு பிறக்குற இரட்டை குழந்தைகள்ல ஒரு குழந்தை ஊனமா பிறக்குது. 25 வருஷம் கழிச்சு, அந்த போலீசை கொன்னவங்க ஒவ்வொருத்தரா இறந்து போறாங்க. அவங்களை யாரு கொன்னதுங்குற சுவாரஸ்யமான திரைக்கதையோட உருவாக்கப்பட்ட படம்தான் இது. இப்படம் வெளியாகி 36 ஆண்டுகள் ஆகுது. கண்டுபிடிச்சுட்டீங்களா?!

Similar News

News November 25, 2025

தூத்துக்குடியில் குவியும் பறவைகள் PHOTOS

image

தூத்துக்குடி கடலோர பகுதிகளில் வெள்ளை அரிவாள் மூக்கன் பறவைகள் கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளன. இந்த வருடம் ஏராளமான புலம்பெயர் பறவைகள், மீன், பூச்சிகள் உள்ளிட்ட இரைகளுக்காக குவிந்துள்ளன. இது ஈரநிலங்களில் சுற்றுச்சுழல் மேம்பட்டு இருப்பதை பிரதிபலிக்கிறது. மேலே, பறவைகளில் போட்டோக்களை பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

News November 25, 2025

மகாவீரர் பொன்மொழிகள்

image

*தீங்கில்லாத உண்மையை மட்டுமே பேச்சிலும் செயலிலும் பின்பற்றுதலுக்கு பெயரே வாய்மை.
*தனக்கு உரிமையில்லாததையும், கொடுக்கப்படாததையும் தனக்கு எடுத்து கொள்ளாதிருத்தல்.
*ஆன்மிக நோக்கில் ஆண்களும், பெண்களும் சரிசமமானவர்கள். இருவருமே துறவறம் மூலம் வீடுபேறு அடைய முடியும்.
*நம்பிக்கை, நல்லறிவு, நற்செயல் ஆகியவற்றை கடைபிடித்தால் சித்த நிலையை அடையலாம்.

News November 25, 2025

விசிகவே ஒரு பல்கலை தான்: திருமாவளவன்

image

அம்பேத்கர் கனவை சிதைப்பதே பாஜகவின் நோக்கம் என திருமாவளவன் விமர்சித்துள்ளார். வெயில், மழை பாராது பொருளில்லாமல் மந்தைகளை போல் மக்கள் காத்துக் கிடக்கும் போக்கு கொண்ட அரசியல் மாற வேண்டும் என்றார். எனவே, ஒவ்வொருவரும் அரசியலில் தெளிவுபெற வேண்டும் என்ற திருமா, அதற்காக கல்லூரி செல்ல வேண்டியதில்லை, ஏனென்றால் விசிகவே ஒரு பல்கலை தான் என குறிப்பிட்டார். உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!