News October 11, 2025
கொய்யா இலையால் இவ்வளவு நன்மைகளா!

கொய்யா இலையால் நம் உடலுக்கு கிடைக்கும் பயன்களில் முக்கியமானவை: * கொய்யா இலை சாறு குடிப்பதால் செரிமான கோளாறு சரியாகும். *சொத்தைப்பல் வலி, வாய்ப்புண், ஈறு பிரச்சனை உள்ளவர்களுக்கு தீர்வு கிடைக்கும். *கொய்யா இலை தேநீர் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை & தேவையற்ற கொழுப்பின் அளவு குறைவும். *உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
Similar News
News March 5, 2026
பட்டா, சிட்டா ஆவணம்.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

பட்டா, சிட்டா, FMB ஆகியவற்றை ஒன்றாக பெறும் வகையில், ஒருங்கிணைந்த நில ஆவணம் வழங்கும் சேவையை TN அரசு தொடங்கியுள்ளது. eservices.tn.gov.in இணையதளத்தில் நிலம் சார்ந்த மாவட்டம், வட்டம், கிராமம் உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து ஒருங்கிணைந்த ஆவணத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம். மேலும், நிலத்தின் உரிமை மாற்ற வரலாற்றை தெரிந்துகொள்ள உதவும் பட்டா மாறுதல் அறிக்கை சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. SHARE IT
News March 5, 2026
திமுக – காங்கிரஸில் இன்னும் இந்த சிக்கல் இருக்குதா?

திமுக-காங்., இடையே ஏற்பட்டிருக்கும் கூட்டணி உடன்பாடு வெறும் பேப்பரில் மட்டுமே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இவ்வளவு நாள் தவெகவுடன் காங்., திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தியதே அதற்கு காரணம் என்கின்றனர். இதனால், காங்கிரஸ் மீது திமுகவுக்கு நம்பிக்கை குறைந்திருக்கலாம் எனவும் இதனால் இந்த கூட்டணி அடுத்துவரும் தேர்தல்களில் கைகோர்க்குமா என்பது சந்தேகமே என கூறி வருகின்றனர்.
News March 5, 2026
வங்கி கணக்கில் ₹11,000… முதல்வர் அறிவித்தார்

புதுச்சேரியிலும் தேர்தல் வரவிருக்கும் நிலையில், அம்மாநில முதல்வர் ரங்கசாமி அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி, பயிறு வகைகள், எள்ளுக்கு ₹6,000, பாரம்பரிய நெல், வேர்க்கடலைக்கு ₹7,000, கரும்பு, பருத்தி உற்பத்தி செய்வோருக்கு மானியமாக ₹11,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட மானியம் 2026 -27 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


