News August 26, 2024
காவலர் வேலைவாய்ப்பு.. நாளை முதல் விண்ணப்பப் பதிவு

NIA உள்ளிட்ட அமைப்புகளில் காலியாக உள்ள காவலர் வேலைகளுக்கு ஆட்தேர்வு தொடர்பான அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நாளை வெளியிடவுள்ளது. ssc.gov.in. என்ற இணையதளத்தில் நாளை அறிவிப்பு வெளியானதும் NIA, CAPFs, SSF மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் காவலர் வேலைக்கு உடனடியாக விண்ணப்பப் பதிவு தொடங்கும். விருப்பமுள்ளோர் அந்த தளத்தில் அக்டோபர் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT
Similar News
News December 27, 2025
ராசி பலன்கள் (27.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 27, 2025
புதிய வரலாறு படைத்த தீப்தி சர்மா

டி20-ல் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். இலங்கைக்கு எதிராக இன்று 3 விக்கெட்டுகளை எடுத்ததால், இந்த பெருமை பெற்றார். இந்தியாவில் 150 விக்கெட்களை கடந்த முதல் வீராங்கனையை மாறிய அவர், சர்வதேச அளவில் 2-வதாக உள்ளார். அதேசமயம் டி20-ல் அதிக விக்கெட்டுகளை(151) வீழ்த்தியவர்களின் பட்டியலில், ஆஸ்திரேலிய வீராங்கனை மேகனுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
News December 27, 2025
ஒரே வீச்சில் கடல் கடந்து சாதனை PHOTOS

மணிப்பூரைச் சேர்ந்த 3 பருந்துகள், உலகின் மிகவும் அசாதாரணமான பயணங்களில் ஒன்றை நிறைவு செய்துள்ளன. ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் 5,000–6,000 கி.மீ. தூரம் பறந்து ஆப்பிரிக்காவை அடைந்துள்ளன. ஒரே வீச்சில் ஓய்வில்லாமல் கடலை கடந்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்திய வனவிலங்கு விஞ்ஞானிகள், பருந்துகளின் சாட்டிலைட் டிரான்ஸ்மிட்டர்களை பொருத்தி, அவற்றின் இருப்பிடம் குறித்த தகவல்களை சேகரிக்கின்றனர்.


