News August 29, 2025
GST சீர்திருத்தங்கள் பலன் அளிக்காது: CM ஸ்டாலின்

மாநில வருவாயை பாதுகாக்காமல் GST சீர்திருத்தங்கள் மக்களுக்கு பலன் அளிக்காது என CM ஸ்டாலின் கூறியுள்ளார். GST-ல் சீர்திருத்தங்கள் கொண்டுவருவது தொடர்பாக TN உள்பட பாஜக ஆளாத மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இதில், சீர்திருத்தத்தின் நோக்கத்தை வரவேற்கும் அதேநேரம், எந்தவொரு குறைப்பும் நலத்திட்டங்களை தக்கவைக்கும் மாநில வருவாயை பாதிக்கக்கூடாது என கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News August 29, 2025
நடிகை பாலியல் புகார்.. வசமாக சிக்கிய MLA

பாலியல் புகாரில் கேரள காங். MLA ராகுல் மாங்கூட்டத்தில் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்து தவறாக நடக்க முயற்சிப்பதாக ராகுல் மீது நடிகை ரினி ஆன் ஜார்ஜ், எழுத்தாளர் ஹனி பாஸ்கரன் உள்ளிட்டோர் புகார் கூறியிருந்தனர். இதனையடுத்து, அவர் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், அவர் மீது வழக்குப்பதிந்து திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீஸ் விசாரித்து வருகிறது.
News August 29, 2025
அமெரிக்க கச்சா எண்ணெய்யை வாங்க தொடங்கிய இந்தியா

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட இந்திய அரசு நிறுவனங்கள், USA கச்சா எண்ணெய்யை அதிகளவு ஆர்டர் செய்துள்ளன. டிரம்ப்பின் 50% வரிவிதிப்பு, இந்தியா – USA உறவில் விரிசல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மத்தியில், இந்த வர்த்தகம் நடைபெறுகிறது. மலிவான விலையில் USA கச்சா எண்ணெய் கிடைப்பதால், இந்திய நிறுவனங்கள் அதை வாங்குவதில் ஆர்வம் காட்டியுள்ளன. அதேசமயம், ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதையும் நிறுத்தவில்லை.
News August 29, 2025
ஆசிய கோப்பை: இந்திய அணி ஜெர்ஸியில் முக்கிய மாற்றம்

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி எந்த ஜெர்ஸி ஸ்பான்சரும் இல்லாமல் விளையாடும் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தின் விளைவாக, Dream 11 உடனான தனது ஒப்பந்தத்தை BCCI முறித்துக் கொண்டது. ஆசிய கோப்பை தொடர் வரும் செப்., 9-ம் தேதி தொடங்குவதால், இந்த குறுகிய காலத்திற்குள் ஸ்பான்சரை தேடுவது கடினம் என்பதால், நேற்றைய BCCI கூட்டத்தில் மேற்கூறிய முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.