News September 4, 2025

GST சீர்திருத்தம் வாழ்க்கையை மேம்படுத்தும்: மோடி

image

12%, 28% GST வரம்புகள் நீக்கப்பட்டு 5%, 18% என்ற சீர்திருத்தங்கள் செப்.22 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன் மூலம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருள்களில் GST-யில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திருத்தங்கள் நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று PM மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிறு வணிகர்கள் உள்பட அனைவரும் தொழில் செய்வதை எளிதாக்கும் என்றும் X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News September 4, 2025

பைக், ஆட்டோ, கார்களின் விலை குறைகிறது

image

GST சீர்திருத்தங்களின் அடிப்படையில் மோட்டார் வாகனங்களுக்கான வரம்பு 28%-லிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி,
*1,500 cc-க்கு மிகாத டீசல் கார்கள்.
*ஆம்புலன்ஸ்
*ஆட்டோ உள்பட 3 சக்கர வாகனங்கள்.
*1.200 cc-க்கு குறையாத Hybrids.
*மோட்டார் வாகனங்களின் உதிரி பாகங்கள்.
*வாகனங்களின் பாகங்கள்.
*350 cc-க்கு குறைவான பைக்குகள்.

News September 4, 2025

GST குறைப்புக்கு பிஹார் தேர்தல் காரணமா? ப.சிதம்பரம்

image

தற்போது அறிவித்துள்ள GST சீர்திருத்தங்கள் 8 ஆண்டுகள் தாமதமானது என்று ப.சிதம்பரம் சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட X பதிவில், இந்த மாற்றத்திற்கு என்ன காரணமாக இருக்கும் என சிலவற்றை பட்டியலிட்டுள்ளார். நாட்டின் மந்தமான வளர்ச்சியா? அதிகரிக்கும் வீட்டுக்கடனா? குறைந்துவரும் வீட்டு சேமிப்பா? பிஹார் தேர்தலா? டிரம்ப், அவரது வரியா? அல்லது இவை அனைத்துமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News September 4, 2025

காந்தி பொன்மொழிகள்

image

*மிருகங்களை போல் நடந்து கொள்கிறவன் சுதந்திர மனிதனாக இருக்க முடியாது.
*கண் பார்வையற்றவன் குருடன் அல்ல, தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன்.
*நல்ல நண்பனை விரும்பினால் நீ நல்ல நண்பனாய் இரு.
*பெண்களே, ஆசைகளுக்கும் ஆண்களுக்கும் அடிமையாய் இருக்க மறந்து விடுங்கள்.
*எப்போதும் உண்மையை மறைக்காது சொல்லக்கூடிய மனத்திடம் வேண்டும்.

error: Content is protected !!