News July 24, 2024

GST வரியால் மக்களின் வரிச்சுமை குறைந்தது: நிர்மலா

image

GST வரியால் சாமானிய மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர், “GST-ஐ மேலும் எளிமைப்படுத்தவும், சீர்ப்படுத்தவும் மத்திய அரசு பாடுபடும். இதன் மூலம் வர்த்தகம் செய்வது எளிதாகும். அதுபோல், சுங்க வரி விகிதங்களும் ஒழுங்குப்படுத்தப்படும். தொழில்துறைக்கு தளவாட செலவுகள் குறைந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

Similar News

News March 4, 2026

BIG BREAKING: திமுகவுடன் காங்.. முடிவை அறிவித்தார்

image

திமுக – காங்., தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஸ்டாலின், செல்வப்பெருந்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கூட்டணிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்த நிலையில், தற்போது பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது.. ஒப்பந்தத்தின்படி, திமுக கூட்டணியில் காங்.,க்கு 28 MLA சீட் + 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

News March 4, 2026

குழந்தைகளுக்கு Diaper மாட்டும் பெற்றோர்களே உஷார்!

image

வீட்டில் இருக்கும்போது கூட குழந்தைகளுக்கு Diaper மாட்டும் பழக்கம் வந்துவிட்டது. அதில் அவர்கள் ஒருமுறை சிறுநீர் கழித்தால் கூட Diaper-ஐ மாற்ற வேண்டும். இல்லையென்றால் அதனால் ஏற்படும் நோய் தொற்றால், Urinary Infection-ல் தொடங்கி, சில சமயங்களில் சிறுநீரகம் வரை நோய் தொற்று பரவலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். முடிந்தளவிற்கு டயப்பர் வேண்டாம் எனவும் அறிவுறுத்துகின்றனர். SHARE.

News March 4, 2026

ஈரான் தாக்கு பிடித்தால் அமெரிக்காவுக்கு பெரும் சிக்கல்

image

உச்ச தலைவர் கமேனியின் மரணத்திற்கு பிறகு ஈரான் சரணடையாமல் அதன் தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது. இந்தப் போர் 4 வாரங்களில் முடிவடையும் என்று டிரம்ப் கூறினாலும், அது நீளும் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். ஈரான் மீதான தாக்குதல்கள் இன்னும் 10 நாள்களுக்குத் தொடர்ந்தால், அமெரிக்காவின் முக்கியமான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளின் இருப்பு குறைந்து போகக்கூடும் என்று பென்டகன் எச்சரித்துள்ளது.

error: Content is protected !!