News September 9, 2024
ஹெல்த் இன்சூரன்ஸ் மீது ஜிஎஸ்டி: ஆய்வு செய்ய குழு

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறித்து விரிவாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஹெல்த் இன்சூரன்ஸ், லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகள் மீது தலா 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதுகுறித்து டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முடிவில் விரிவாக ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழுவை ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்தது.
Similar News
News August 19, 2025
பாஜக பாணியிலேயே பதிலடி கொடுத்த காங்கிரஸ்

நாட்டின் து.ஜனாதிபதி தேர்தலில் பிராந்திய அரசியலை கையில் எடுத்துள்ளன அரசியல் கட்சிகள். து.ஜனாதிபதி வேட்பாளராக தமிழரான CPR-ஐ தேர்ந்தெடுத்து திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது பாஜக. இதனையடுத்து பாஜக பாணியில் தெலங்கானாவை சேர்ந்த சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக அறிவித்து ஆந்திரா, தெலங்கானாவில் பாஜக கூட்டணிக்கு காங்கிரஸ் செக் வைத்துள்ளது.
News August 19, 2025
பிரிட்ஜ், வாஷிங் மெஷின் விலை குறையப் போகிறது..!

தீபாவளி பரிசாக ஜிஎஸ்டியை குறைக்கப் போவதாக PM மோடி அறிவித்திருக்கிறார். அதன்படி, 28%, 18% ஜிஎஸ்டி வரம்புகளில் இருக்கும் பெரும்பாலான பொருட்களின் வரி குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் விலை கணிசமாக குறைய உள்ளது. குறிப்பாக, ₹40,000 மதிப்புள்ள மின்னணு பொருட்களின் விலை ₹4,000 வரை குறைய வாய்ப்புள்ளது. SHARE IT
News August 19, 2025
Photographer-களை போட்டோ பிடித்த ‘Photographer’ ஸ்டாலின்!

வெயில், மழை என எந்த சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல், உழைத்து வரும் போட்டோகிராபர்களை கொண்டாடும் விதமாக இன்று உலக போட்டோகிராபர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. எந்த செய்தியானாலும், அது நமக்கு முதலில் கிடைப்பது போட்டோ வடிவில்தான். எப்போதும், போட்டோ எடுத்து திரைக்கு பின்னால் மட்டுமே நிற்பவர்களை, நேரில் வரவழைத்த CM ஸ்டாலின், அவர்களை போட்டோ எடுத்து மகிழ்ந்தார்.