News April 2, 2025
மார்ச்சில் ₹1.96 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

கடந்த மார்ச் மாதத்தில் ₹1.96 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது. இது 2024 மார்ச் மாத வசூலை விட 9.9% அதிகமாகும். அதேபோல், ஒட்டுமொத்த ஜிஎஸ்டியில், மத்திய ஜிஎஸ்டியாக ₹38,100 கோடி, மாநில ஜிஎஸ்டியாக ₹49,900 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ₹95,900 கோடி மற்றும் ஜிஎஸ்டி செஸ் ₹12,300 கோடி வசூலாகியுள்ளது. இதன்மூலம், 2024-25 நிதியாண்டில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூல் 9.4% அதிகரித்து ₹22.08 லட்சம் கோடியாக உள்ளது.
Similar News
News April 3, 2025
டிரம்ப்பால் இந்தியாவிற்கு ₹26,000 கோடி லாஸ்?

இந்திய இறக்குமதி பொருள்களுக்கு 26% வரியை டிரம்ப் விதித்துள்ளார். இந்த வரி விதிப்பு வேளாண், கெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது, இந்த கூடுதல் வரிவிதிப்பால் இந்தியாவிற்கு ₹26,000 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்படும் என அவர்கள் கணித்துள்ளனர். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1% ஆகும்.
News April 3, 2025
நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க..

காலை செய்யும் சில நடவடிக்கைகளை நம்மை நாள் முழுவதுமே சுறுசுறுப்பாக இருக்க உதவிடும் * காலை கடனை செய்யுங்கள், உடல் புத்துணர்ச்சி பெரும் * ஒரு கிளாஸ் தண்ணீர் பருகுங்கள், செரிமான பிரச்சனையை சரிப்படுத்தும் * சோம்பேறித்தனமாக அமர்ந்திருக்காமல், எழுந்ததுமே சில வேலைகளை செய்யுங்கள், அது ஒரு உத்வேகத்தை கொடுக்கும் * காலையில் ஊட்டச்சத்து மிக்க உணவை சாப்பிடுங்கள். அதனை பழக்கப்படுத்துங்கள்.
News April 3, 2025
இன்று SRH vs KKR: வெற்றி யாருக்கு?

ஐபிஎல்லின் 15ஆவது லீக் போட்டியில் இன்று SRH vs KKR மோதுகின்றன. கொல்கத்தாவில் மாலை 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. தொடர்ந்து 2 தோல்விகளை சந்தித்துள்ள ஹைதராபாத் ஆரஞ்சு படை, இன்றைய போட்டியில் வெல்ல போராடும். அதேபோல் புள்ளிப்பட்டியலில் கடைசியில் உள்ள கொல்கத்தா அணி, இந்த போட்டியில் வென்று, தன் மீதான களங்கத்தைத் துடைக்க முற்படும் என்பதால் போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது.