News September 3, 2025

GST 2.0: இந்த பொருள்களின் விலை உயரும்!

image

இன்றைய GST கவுன்சில் கூட்டத்தில் முக்கியமான விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. அதன்படி *1200cc-க்கு அதிகமான கார்கள், 350cc-க்கு அதிகமான பைக்குகளுக்கு 40% வரிவிதிக்கப்படும். *₹40 லட்சத்திற்கு குறைவான EV கார்களுக்கு 18%, ₹40 லட்சத்திற்கு அதிகமான EV கார்களுக்கு 40% வரி. *நிலக்கரிக்கான வரி 5%-ல் இருந்து 18% ஆக உயர்வதால், மின்சார கட்டணம் உயரும். *பிராண்டட் ஜவுளி பொருள்களுக்கு 18%-ஆக வரி உயர்த்தப்படுமாம்.

Similar News

News September 3, 2025

பட்டா, சிட்டா ஆவணம்.. தமிழக அரசு புதிய மாற்றம்

image

சொத்துகளை வாங்குவது, விற்பதில் உள்ள சிக்கல்களை குறைக்க ஆளில்லா பதிவு (Presenceless Registration) முறையை அறிமுகப்படுத்த TN அரசு தயாராகி வருகிறது. அதன்படி, சொத்துகளை விற்பவரோ, வாங்குபவரோ பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு செல்லாமல் ஆன்லைனில் பதிவு நடைமுறைகளை செய்ய முடியும். சார்பதிவாளர் ஆன்லைனிலேயே விண்ணப்பத்தை சரிபார்த்து ஒப்புதல் அளிப்பார். இந்தாண்டு இறுதிக்குள் இது நடைமுறைக்கு வருமாம். SHARE IT.

News September 3, 2025

குப்புற படுத்து தூங்குறீங்களா? உஷார்!

image

தூங்கும்போது எந்த position-ல் படுத்து உறங்குவது என்பது இன்றளவும் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. நீங்கள் எப்படி படுத்து உறங்குகிறீர்கள் என்பதை பொறுத்துதான் உங்கள் முதுகெலும்பின் ஆரோக்கியம் இருக்கிறதாம். நேராக படுத்து உறங்குவதுதான் சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள். குப்புற / ஒரு பக்கமாக படுத்து உறங்குவது முதுகெலும்பு பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.

News September 3, 2025

பாக்.,-ஐ பந்தாடிய S-400.. இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்

image

வான் பாதுகாப்பு அமைப்பான S-400-ஐ அடுத்த 2 ஆண்டுகளில் ரஷ்யா வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ல் 5 S-400 அமைப்புகளை ₹39,000 கோடி மதிப்பில் வாங்க இந்தியா ரஷ்யாவிடம் ஒப்பந்தம் செய்தது. அதில் மூன்றை ஏற்கனவே ரஷ்யா வழங்கிய நிலையில், 2026, 2027-ல் மீதமுள்ள இரண்டையும் வழங்க உள்ளது. ஆபரேஷன் சிந்தூரின் போது, பாகிஸ்தான் ஏவுகணைகளை S-400 இடைமறித்து தாக்கி அழித்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!