News April 20, 2025
GST சாலையில் போக்குவரத்து மாற்றம்

தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை GST சாலையில், 4 வழிச்சாலைக்கான மேம்பால கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், அவ்வழியில் இன்று (ஏப்.20) முதல் 3 நாட்களுக்கு (ஏப்.22) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை செல்லும் வாகனங்கள் செனடாப் சாலை, டர்ன்புல்ஸ் சந்திப்பு வழியாக சேமியர்ஸ் சாலையின் வலதுபுறம் திரும்பி நந்தனம் சந்திப்புக்கு சென்று அண்ணா சாலை செல்லலாம்.
Similar News
News December 13, 2025
மெரினா: மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன பாதை

மெரினா நீலக்கொடி கடற்கரை பகுதியில், மாற்றுத்திறனாளிகள் கடற்கரை வரை சென்று வரும் வகையில், தற்காலிக நவீன பாதை அமைக்கப்பட்டுள்ளது. 352 மீட்டர் நீளத்திற்கு porta mat மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த பாதையை, மாற்றுத்தினாளிகள் மற்றும் முதியோர்கள் பயன்படுத்தி, கடலுக்கு அருகில் சென்று வருகின்றனர். இதைப்போலவே அனைத்து கடற்கரையிலும் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை: தட்டி கேட்ட நபருக்கு கத்தி குத்து

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் கருணாகரன், இவர் நேற்று அதேப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கிண்டல் செய்துள்ளார். இதையறிந்த ஜாபர் அலி, அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருணாகரன், ஜாபர் அலியை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி சென்றார். இதைத்தொடர்ந்து ஜாபர் அலி அளித்த புகாரின் பேரில், கருணாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.