News August 5, 2024

ஐந்தும் ஒரே நேர்கோட்டில் இருந்தால் வளர்ச்சி: மகேஷ்

image

தனியார் பள்ளிகளும் , அரசு பள்ளிகளும் பரஸ்பரமாக இணைந்து செயலாற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார். திராவிட மாடல் அரசில் பள்ளிகளில் அரசுக்கு எந்த பாரபட்சமும் இல்லை எனக் கூறிய அவர், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி நிறுவனம், பள்ளிக்கல்வித் துறை ஆகிய ஐந்தும் ஒரே நேர்கோட்டில் இருந்தால் தான் அடுத்தக் கட்ட வளர்ச்சி ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 18, 2026

BREAKING: சிக்கன் விலை வரலாறு காணாத உயர்வு

image

நாமக்கல் மொத்த சந்தையில் கறிக்கோழி விலை இன்று கிலோவுக்கு ₹3 அதிகரித்துள்ளது. இதனால், இதுவரை இல்லாத வகையில் 1 கிலோ ₹152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முட்டைக்கோழி 1 கிலோ ₹82-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் முட்டை 30 காசுகள் குறைந்து ₹5.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிக்கன் விலை உயர்வால் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் 1 கிலோ சிக்கன் ₹240 – ₹300 வரை விற்பனையாகிறது. உங்கள் ஊரில் எவ்வளவு?

News January 18, 2026

கார் ரேசில் அஜித்துடன் Ride போகணுமா?

image

கார் ரேசிங்கில் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கிறார் நடிகர் அஜித். அவரை பார்த்து ஒருமுறை போட்டோ எடுத்துவிட மாட்டோமா என தவித்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு, அவருடன் கார் ரேசிங் போகவே ஒரு சூப்பர் சான்ஸ் கிடைச்சிருக்கு. வரும் 25-ம் தேதி, துபாயில் நடைபெறும் ரேசில் அவருடன் காரில் அமர்ந்து நீங்க பயணிக்கலாம். அதற்கு டோக்கன் பீஸாக ₹86,465 கட்ட வேண்டும். சில சீட்கள் மட்டுமே உள்ளன. யாருக்கெல்லாம் போக ஆசை?

News January 18, 2026

சொல்வார்கள், செய்ய மாட்டார்கள்: RS பாரதி

image

திமுக மட்டுமே வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி என்று RS பாரதி தெரிவித்துள்ளார். அதிமுக <<18879658>>தேர்தல் அறிக்கை<<>> குறித்து பேசிய அவர், அதிமுகவினர் வாக்குறுதிகளை சொல்வார்கள், ஆனால் செய்யமாட்டார்கள்; அவர்கள் சேர்ந்திருக்கும் கூட்டணி அப்படிப்பட்டது என்று விமர்சித்துள்ளார். திமுக TN முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் அறிக்கை தயாரித்த பின், அதை விரைவில் CM ஸ்டாலின் வெளியிடுவார் என்றும் அவர் கூறினார்.

error: Content is protected !!