News March 18, 2024
பாஜக கூட்டணிக்கு பெருகும் ஆதரவு

தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு பெரும் ஆதரவு உள்ளதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு பெருகுவதாக தெரிவித்துள்ளார். இன்று மாலை அவர் கோவை வர உள்ள நிலையில், இதனை பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் பாஜக கூட்டணியில் தமாகா, புதிய நீதி கட்சி, IJK, தமமுக உள்ளிட்ட கட்சிகளுடன், ஓபிஎஸ், டிடிவியும் இடம்பெற உள்ளனர்.
Similar News
News November 18, 2025
DMK வெற்றிக்கு காங்., முக்கிய காரணம்: செல்வப்பெருந்தகை

பிஹார் தேர்தல் முடிவுகள் எந்த விதத்திலும் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். திமுக தங்களை மதிக்கவில்லை என்றும் தங்களுடன் ஒத்துப்போகவில்லை எனவும் காங்., நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இதுகுறித்து டெல்லி தலைமைக்கு எடுத்துக்கூறி பிரச்னையை சரி செய்வோம் எனக் கூறிய அவர், திமுக வெற்றி பெறுவதற்கு காங்., வாக்குகள் மிக முக்கிய காரணமாக உள்ளது என்றார்.

இன்று ஒரே நாளில் விலை ₹3,000 குறைந்தது

வெள்ளி விலை சரசரவென சரிந்து வருகிறது. இன்று(நவ.18) கிராமுக்கு ₹3 குறைந்து ₹170-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ₹3,000 குறைந்து ₹1,70,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த 13-ம் தேதி பார் வெள்ளி 1 கிலோ ₹1,83,000-க்கு விற்பனையான நிலையில், 5 நாள்களில் மட்டும் ₹13,000 குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில், வெள்ளி விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் வரும் நாள்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.