News February 7, 2026

Group B-க்கு தள்ளப்பட்ட ரோஹித், கோலி

image

நட்சத்திர வீரர்களான ரோஹித், கோலிக்கு மத்திய ஒப்பந்தத்தில் BCCI அதிர்ச்சி அளித்துள்ளது. அவர்கள் Group B-க்கு தரமிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. A+ பிரிவை நீக்கியுள்ள BCCI, கில், பும்ரா, ஜடேஜா ஆகியோருக்கு Group A-வில் இடம் வழங்கியுள்ளது. ரோஹித், கோலி இருவரும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இதனால், அவர்களின் தற்போதைய விளையாட்டு நிலையை பொறுத்து தரமிறக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News February 17, 2026

திமுக கூட்டணியில் வெட்டு, குத்து நடக்கிறது: செல்லூர் ராஜு

image

திமுக கூட்டணியின் முக்கிய அங்கமான காங்கிரஸ் இப்போது போர் குரல் எழுப்பியுள்ளதாக செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணி முழு வடிவம் பெற்றுள்ள நிலையில், திமுக கூட்டணியில் வெட்டு, குத்து நிலவி வருவதாக அவர் விமர்சித்துள்ளார். பொதுவாகவே திமுக, அதன் கூட்டணி கட்சிகளை மதிப்பதில்லை எனவும் அதற்கு திருமாவளவனே சான்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News February 17, 2026

வங்கி கணக்கில் ₹10,000.. உடனே இதை செய்யுங்க

image

வயதான பிறகு உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள பென்ஷன் அவசியமாகிறது. இதற்கு ஏதுவாக, மாதம் ₹10,000 வரை பென்ஷன் வழங்குகிறது வய வந்தனா ஓய்வூதியத் திட்டம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். ₹1.5 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை முதலீடு செய்தால், மாதம் ₹1,000 முதல் ₹10,000 வரை ஓய்வூதியம் பெற முடியும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இங்கே <>க்ளிக் <<>>பண்ணுங்க. SHARE.

News February 17, 2026

தவெக தேர்தல் அறிக்கை ரெடி.. 27-ம் தேதி வெளியிட திட்டம்

image

2026 தேர்தல் நெருங்குவதால் மக்களின் பார்வையை தவெக பக்கம் திரும்ப விஜய் தீவிரமாக திட்டம் வகுத்து வருகிறாராம். அதன்படி வரும் பிப். 27-ம் தேதி தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இலவசங்களை தவிர்த்து, மக்களை கவரும் அம்சங்களுடன் அறிக்கை தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திமுக, அதிமுகவின் இலவசங்கள் முன் TVK தேர்தல் அறிக்கை தாக்கு பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

error: Content is protected !!