News August 14, 2024

விரைவில் குரூப் 4 ரிசல்ட்

image

TNPSC குரூப் 4 முடிவுகள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 6,244 காலிப் பணியிடங்களுக்காக கடந்த ஜூன் 9ம் தேதி நடந்த இத்தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில், இந்த வாரத்தில் முடிவுகள் வெளியாக உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. முடிவுகளை <>tnpsc.gov.in<<>> என்ற TNPSCயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.

Similar News

News January 1, 2026

10 மாவட்டங்களில் மழை பொழியும்

image

அதிகாலை 4 மணி வரை TN-ல் உள்ள 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, விருதுநகர், தேனி, தஞ்சை, திருவாரூரில் லேசான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்து வீடு திரும்புவோர் பாதுகாப்பாக பயணிக்கவும். உங்க ஊரில் மழை பெய்கிறதா?

News January 1, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News January 1, 2026

2025-ன் முக்கிய நிகழ்வுகள் இவைதான்: கார்கே

image

2025-ல் பாஜக ஆட்சியில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கார்கே பட்டியலிட்டுள்ளார். *ஏழைகளின் வேலை உரிமைக்கான 100 நாள் வேலை திட்டம் பறிக்கப்பட்டது. *SIR மூலம் வாக்குரிமை பறிக்கப்பட்டது. *1% பணக்காரர்கள் கையில் இந்தியாவின் 40% வளங்கள் சென்றன. *மோடியின் நண்பர் டிரம்ப் இந்தியா மீது வரிவிதித்தார். *வேலைவாய்ப்பின்மை உச்சம். *SC, ST, OBC மீதான வன்முறை அதிகரிப்பு என அவர் பட்டியலிட்டுள்ளார்.

error: Content is protected !!