News December 17, 2024
குரூப் 2 தேர்வு: சான்றுகளை பதிவேற்ற நாளையே கடைசி

TNPSC குரூப் 2, 2ஏ மெயின் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வு எழுதுவாேர், அவர்களின் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்ற டிசம்பர் 18ஆம் தேதி வரை TNPSC கால அவகாசம் அளித்திருந்தது. இந்த அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. ஆதலால் இனிமேலும் தாமதிக்காமல் உடனடியாக சான்றுகளை பதிவேற்றம் செய்யும்படி TNPSC கேட்டுக் கொண்டுள்ளது. இந்தத் தகவலை பகிருங்க.
Similar News
News September 6, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல். ▶குறள் எண்: 450 ▶குறள்: பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் ▶ பொருள்: நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.
News September 6, 2025
அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? SK நச் பதில்

தமிழ் சினிமாவில் ‘அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?’ என்ற கேள்வி இன்னும் ஓய்ந்தபாடில்லை. தற்போது சிவகார்த்திகேயனிடமும் இதுகுறித்து கேட்க, ‘எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான்’ என பதிலளித்தார். ஏற்கெனவே தனது ரோல் மாடல் ரஜினி என ‘மதராஸி’ பட விழாக்களில் அடிக்கடி அவர் கூறி வந்தார். அதேநேரம், துப்பாக்கியை கையில் கொடுத்த விஜய் பற்றியும் கேள்வி SK-வை சூழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
News September 6, 2025
பேரிடர் பாதித்த இடங்களை ஆய்வு செய்யும் PM மோடி

வட இந்தியாவில் ஏற்பட்ட மேகவெடிப்பு & வரலாறு காணாத கனமழையால் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட இமாச்சல், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களை விரைவில் நேரில் பார்வையிட உள்ளதாக PM அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, பேரிடர் நிவாரணம் குறித்து அவர் ஆலோசனை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.