News September 29, 2025
குரூப் 2 தேர்வு: ஒரு இடத்துக்கு 650 பேர் போட்டி

குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வை சுமார் 1.34 லட்சம் பேர் எழுதவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தேர்வு எழுத 5.53 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்று 4.18 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். அதன்படி 645 குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்களில், ஒரு இடத்துக்கு மட்டும் 650 பேர் போட்டி போடுகின்றனர். தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு எளிதாக இருந்ததா?
Similar News
News September 29, 2025
விஜய்யை வளைக்க மாஸ்டர் பிளான் போடுகிறதா பாஜக?

கரூர் விவகாரத்தில் விஜய் மீது பாஜக Soft Tone எடுக்க, பின்வாசலில் நடக்கும் கூட்டணி பேரம்தான் காரணம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கு தோதாக, ஆடிட்டர் குருமூர்த்தியை விஜய்யின் பிரதிநிதிகள் சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், பாஜகவின் பிளானை ஸ்மெல் செய்ததால் தான், ராகுலும் தன் பங்கிற்கு விஜய்க்கு போன் செய்து பேசியதாகவும் சொல்கின்றனர்.
News September 29, 2025
அடுத்தமுறை டாக்டர் Prescription பார்த்தால், இத கவனியுங்க!

டாக்டரின் Prescription-யை வாங்கி பார்க்கும் போது, அதிலிருக்கும் பல Short form வார்த்தைகளின் அர்த்தமே தெரியாது. ஆனால், அடுத்தமுறை இவற்றை நினைவில் கொள்ளுங்கள் *Dx- Diagnosis (நோய் கண்டறிதல்) *Rx- Prescription (மருந்துக்குறிப்பு) *Tx- Treatment (சிகிச்சை) *Sx- Surgery (அறுவை சிகிச்சை) *Hx- History (மருத்துவ வரலாறு) *Fx- fracture (எலும்பு முறிவு). இத்தகவலை அனைவருக்கும் பகிரவும்.
News September 29, 2025
கரூர் துயரத்தில் நடவடிக்கை: முதல்வர் அறிவிப்பு

கரூர் துயரத்தில் அருணா ஜெகதீசன் ஆணையம் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, அரசியல் நிகழ்ச்சிகளின்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் வகுக்கப்படும் எனக் கூறிய அவர், அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனிமனித பகைகளை ஒதுக்கி வைத்து, மக்களுடைய நலனுக்காக அனைவரும் சிந்திக்க வேண்டும் என்றார்.