News September 14, 2024
6 நாட்களில் ‘குரூப் 2’ விடைக் குறிப்பு: TNPSC

குரூப் 2 தேர்வுக்கான விடைக் குறிப்பு அடுத்த 6 வேலை நாட்களில் வெளியாகும் என TNPSC தலைவர் பிரபாகர் கூறியுள்ளார். இன்று நடைபெற்ற குரூப் 2 தேர்வுத்தாள் திருத்தும் பணிகள் 2 அல்லது 3 மாதங்களில் நிறைவடையும் என்றும், விரைவில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2,327 காலியிடங்களுக்கு இன்று நடைபெற்ற குரூப் 2 தேர்வை 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதினர்.
Similar News
News December 14, 2025
திமுக இளைஞர்கள் கட்டுப்பாடு உடையவர்கள்: உதயநிதி

திமுகவை தோற்கடித்து விடலாம் என்று பலர் போடும் கணக்கை இளைஞர் அணி சுக்குநூறாக உடைக்கும் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுகவின் இளைஞர் அணியினர் கட்டுப்பாடு உள்ளவர்கள் என்ற அவர், கட்டுப்பாடு இல்லாத கூட்டத்தால் எதுவும் செய்ய முடியாது என விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளார். எதிரிகள் மட்டுமே மாறி மாறி வருகின்றனர், ஆனால் திமுக அதே இடத்தில் தான் இருக்கிறது என்றும் உதயநிதி தெரிவித்தார்.
News December 14, 2025
பவுண்டரி மழை பொழிந்த சர்பராஸ், ஜெய்ஸ்வால்

SMAT தொடரில், ஹரியானாவுக்கு எதிராக 235 ரன்கள் இலக்கை 17.3 ஓவர்களிலேயே எட்டி மும்பை அபார வெற்றி பெற்றது. இதற்கு ஜெய்ஸ்வாலின் அதிரடி சதமும், சர்பராஸ் கானின் மிரட்டலான அரைசதமும் காரணமாகும். 3-வது ஓவரில் ஜெய்ஸ்வால் 6, 4, 4, 4 என அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசினார். சர்பராஸ் கான் தனது பங்கிற்கு 6-வது ஓவரில் 6, 0, 4, 4, 4 என 22 ரன்களும், 7-வது ஓவரில் தொடர்ந்து 4 பவுண்டரிகள் என 16 ரன்களும் குவித்தார்.
News December 14, 2025
அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அரசு அறிவிப்பு

பள்ளிகளுக்கு 12 நாள்கள் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிச.10-ம் தேதி தொடங்கிய தேர்வுகள், 23-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளன. இதையடுத்து, டிச.24 முதல் ஜன.4 வரை மாணவர்களுக்கு லீவுதான். இதில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளும் அடங்கும். மொத்தமாக 12 நாள்கள் விடுமுறை கிடைப்பதால் அதனை கொண்டாட முன்கூட்டியே திட்டமிடுங்கள். வெளியூர் செல்ல அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. SHARE


