News October 28, 2025

விக்கிப்பீடியாவுக்கு போட்டியாக வந்தாச்சு GrokiPedia

image

விக்கிப்பீடியாவுக்கு போட்டியாக Grokipedia என்கிற வலைதளத்தை எலான் மஸ்க்கின் xAI நிறுவனம் தொடங்கியிருக்கிறது. விக்கிபீடியாவில் மனிதர்கள் எழுதி, திருத்துவதால் தவறுகள் இருக்கலாம். ஆனால் Grokipedia-ல் Grok Al-யால் சரிபார்க்கப்பட்ட பதிவுகள் மட்டுமே இருக்கும் என்பதால் நம்பகமாக இருக்கும் என மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த புதிய AI-ஐ பயன்படுத்த இங்க <>க்ளிக் பண்ணுங்க<<>>. SHARE.

Similar News

News October 28, 2025

உணவு வீணடிக்கும் நாடுகளில் இந்தியா எந்த இடம்?

image

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் (UNEP) அமைப்பின்படி, உணவுகள் அதிகளவில் வீணடிக்கப்படும் நாடுகளில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சராசரியாக ஆண்டுக்கு எந்தெந்த நாடுகளில், எவ்வளவு உணவுகள் வீணாகிறது என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உணவு வீணாவதை தவிர்க்க என்ன செய்யலாம்? உங்கள் ஐடியாவை கமெண்ட்ல சொல்லுங்க.

News October 28, 2025

ஜே.பி.நட்டாவுக்கு CM ஸ்டாலின் முக்கிய கடிதம்

image

TN விவசாயிகளின் உரத் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய உரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நடப்பு சம்பா பருவத்தில் பயிர் சாகுபடிக்கான யூரியா, டி.ஏ.பி உரங்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 6.94 லட்சம் மெட்ரிக் டன் யூரியா தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News October 28, 2025

திறனாய்வு தேர்வு… பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

image

ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான <<18121808>>திறனாய்வுத் தேர்வு<<>> அறிவிப்பு வெளியாகியுள்ளது. www.dge.tn.gov.in இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பங்கள் டவுன்லோடு செய்யப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வுக் கட்டணம் ₹10 செலுத்தி, நாளை முதல் பள்ளி HM-களிடம் மாணவர்கள் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவ.4 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!