News August 3, 2024
நெல்லையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ராதாபுரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கூட்ட அரங்கில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் ஆக.7 அன்று மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் மீன்வளத்துறை மற்றும் இதர அரசு துறையால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை மக்கள் அளித்து பயன் பெறலாம் என்றார்.
Similar News
News December 7, 2025
நெல்லை: லட்சக் கணக்கில் வாக்காளர்கள் நீக்கம்

நெல்லை மாவட்டம் (5 தொகுதிகள்) – நேற்றைய நிலவரப்படி பழைய /போலி / இறந்த பெயர்கள் நீக்கம்:
நெல்லை: 42,406 (13.87%)
அம்பை: 43,832 (16.83%)
பாளை: 36,559 (13.07%)
நாங்குநேரி: 55,966 (18.75%)
ராதாபுரம்: 44,011 (16.08%)
மொத்தம் நீக்கம்: 2,22,774 வாக்காளர்கள் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
News December 7, 2025
நெல்லை: ஆதார் கார்டில் ADDRESS மாற்றம்.. FREE

நெல்லை மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.இங்கே <
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க
News December 7, 2025
நெல்லை: மாடு குறுக்கே வந்ததால் தொழிலாளி பலி!

தச்சநல்லூரை சேர்ந்தவர் கணேசன் (55). கார் ஒர்க் ஷாப் தொழிலாளி. இவர் பணி முடிந்து மணிமூர்த்தீஸ்வரம் வழியாக பைக்கில் சென்ற போது சாலையின் குறுக்கே வந்த மாடு மீது பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். மாநகரப் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


