News March 18, 2024
திருவண்ணாமலையில் குறைதீர் கூட்டம் ரத்து!

திருவண்ணாமலையில் இன்று(மார்ச் 18) நடைபெறவிருந்த குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் நீங்கும் வரை குறைதீர் கூட்டங்கள் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 30, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (30.10.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 30, 2025
விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் இன்று (அக் 30) ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் தங்களின் நிலம், நீர் பாசனம், உரம், மின்சாரம் மற்றும் விலை தொடர்பான குறைகளை முன்வைத்தனர். அவர்களின் மனுக்களை பெற்றுக்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
News October 30, 2025
தி.மலையில் இனி ஈஸியா பட்டாவில் திருத்தம் செய்யலாம்!

நிலம் தொடர்பான ஆவணங்களை பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. தி.மலை மக்கள் இனி தங்கள் நிலம் தொடர்பான விவரங்களை ஆன்லைனிலே தெரிந்துகொள்ளலாம். மேலும், பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு <


