News March 18, 2024
காஞ்சிபுரத்தில் குறைதீர் கூட்டம் ரத்து!

காஞ்சிபுரத்தில் இன்று(மார்ச் 18) நடைபெறவிருந்த குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்.19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் நீங்கும் வரை குறைதீர் கூட்டங்கள் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 19, 2026
காஞ்சிபுரத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வரும் ஜனவரி 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 2,000 பணியிடங்களுக்கான நேர்காணலை நடத்த உள்ளன. 10, 12, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் படித்தவர்கள் இதில் பங்கேற்கலாம். ஷேர் பண்ணுங்க!
News January 19, 2026
காஞ்சிபுரம்: உங்க குறைகளை புகார் செய்ய ஒரு கிளிக் போதும்!

காஞ்சி மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘<
News January 19, 2026
காஞ்சி: செவிலியர் பணிக்கு 999 பணியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் இங்கு <


