News March 17, 2024
குறைதீர் கூட்டம் ரத்து – ஆட்சியர்

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் உள்ளிட்ட அனைத்து குறைதீர் கூட்டங்களும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
ஈரோடு: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று 21-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நடைபெற்றது. இதில் விவசாய பெருமக்களிடமிருந்து கோரிக்கைகளை மனுக்களாக பெற்ற, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
News November 22, 2025
ஈரோடு: போலி டிஜிட்டல் திருமண அழைப்பிதழ் மோசடி!

ஈரோடு காவல்துறை சார்பாக அறிவுரை அழைப்பிதழ்களை வாட்ஸ்அப்பில் கோப்புகளாக மக்களுக்கு அனுப்புகின்றனர். இது போன்ற கோப்புகளை பதிவிறக்குவதன் மூலம் உங்கள் மொபைலில் மால்வேர் வைரஸைக் கொண்டு வருகின்றனர். பின்னர் சைபர் குற்றவாளிகள் உங்களின் அனைத்து தகவல்களையும் திருடுகின்றனர்.தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ்அப்பில் திருமண அழைப்பிதழ் வந்தால், அதை கிளிக் செய்ய வேண்டாம் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுரை!
News November 22, 2025
ஈரோட்டிற்கு முதல்வர் வருகை: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழக முதல்வர் தலைவர் மு.க ஸ்டாலின் 26 ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு பெருந்துறை வழியாக முதல்வர் செல்லக்கூடிய பாதையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா இன்று ஆய்வு செய்தார். மேலும், முதல்வருக்கு வரவேற்பு கொடுக்கிற மக்கள் ,கட்சி நிர்வாகிகள் நிற்கக்கூடிய பகுதியையும் எஸ்பி ஆய்வு செய்தார் அவருடன் ஈரோடு மத்திய மாவட்ட திமுக செயலாளர் தோப்பு .வெங்கடாசலம் உடன் இருந்தார்.


