News March 20, 2025
SHARE MARKET-ல் க்ரீன் சிக்னல்… ரூபாய் மதிப்பும் உயர்வு!

தொடர் வீழ்ச்சியில் இருந்த இந்திய பங்குச் சந்தைகள், 4வது நாளாக ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று 899 புள்ளிகள் அதிகரித்த சென்செக்ஸ், பிப்ரவரிக்கு பிறகு முதல்முறையாக 76,348 புள்ளிகளை தொட்டது. இதேபோல், நிப்ஃடி 283 புள்ளிகள் உயர்ந்து 23,190 புள்ளிகளில் வர்த்தகமானது. மேலும், டாலருக்கு நிகராக ரூபாயில் மதிப்பு 1 பைசா உயர்ந்து ரூ.86.46 ஆக உள்ளது.
Similar News
News March 21, 2025
IPL 2025: முதல் போட்டிக்கு மழை அச்சுறுத்தல்

IPL 2025 போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில், முதல் போட்டியிலேயே ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்திக்கும் நிலை உள்ளது. KKR – RCB அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாளை அங்கு கனமழை பெய்ய 90% வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. ஒருவேளை மழையால் நாளை போட்டி முழுவதும் ரத்தானால், இரு அணிகளும் புள்ளிகளைப் பகிர்ந்துகொள்ளும்.
News March 21, 2025
நாமினிகள் எளிதாக அணுக ‘செபி’ வசதி

இறந்தவர்களின் கணக்கை நாமினிகள் எளிதாக அணுக வசதியாக, டிஜிலாக்கருடன் இணைந்து செயல்பட உள்ளதாகப் செபி (SEBI) அறிவித்துள்ளது. இதனால் பயனர் மறைந்தால், அவர் நியமித்த நாமினிகளுக்கு டிஜிலாக்கர் கணக்கைப் படிக்க மட்டும் அனுமதி வழங்கப்படும் எனவும், இதன் மூலம் பங்குச்சந்தையில் பல கோடி மதிப்பிலான அடையாளம் காணப்படாத மற்றும் உரிமை கோரப்படாத சொத்துக்களின் எண்ணிக்கை குறையும் என்றும் கூறப்படுகிறது.
News March 21, 2025
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து (தகுதியான பெண்கள்) விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், உரிய ஆவணங்களை சமர்பித்து மேல்முறையீடு செய்யலாம் என அரசு கூறியுள்ளது. இதை அதிகாரிகள் கவனமாக சரிபார்க்க வேண்டும் என்றும், புதிதாக விண்ணப்பிப்பவர்கள் இ-சேவை மையங்களில் ரேஷன் கார்டு, ஆதார், மொபைல் எண், வங்கி பாஸ்புக் நகல், பாஸ்போர்ட் சைஸ் PHOTO கொடுத்து விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளது.