News May 7, 2025
பங்குச் சந்தையில் பச்சைக் கொடி.. மாத இறுதியில் ஹேப்பி

மாத இறுதி நாளான இன்று இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடனேயே காணப்படுகின்றன. சென்செக்ஸ் 110 புள்ளிகள் அதிகரித்து 80,373 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது. அதேபோல், நிப்ஃடி 26 புள்ளிகள் உயர்ந்து 24,362 புள்ளிகளை பெற்றுள்ளது. HDFC LIFE பங்குகள் இன்று அதிக லாபத்தில் உள்ளன. அதேநேரத்தில், இன்டஸ்இன்ட் வங்கி, பஜாஜ் ஃபின்செர்வ் உள்ளிட்டவற்றின் பங்குகள் இறங்குமுகத்தில் இருக்கின்றன.
Similar News
News November 14, 2025
தேஜஸ்வி யாதவ் மீண்டும் முன்னிலை

3-வது சுற்று முடிவில் <<18283085>>1,273 வாக்குகள்<<>> பின்னடைவில் இருந்த தேஜஸ்வி யாதவ், 6-வது சுற்று முடிவில் 219 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். BJP-யின் சதிஷ் குமார் 23,312 வாக்குகள் பெற்றுள்ளார். குறைவான வாக்கு வித்தியாசமே உள்ளதால், இந்த ரகோபூர் தொகுதி முடிவில் நீண்ட இழுபறி உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 14, 2025
தவெக கூட்டணியை விரும்புகின்றனரா காங்கிரசார்?

தவெக உடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்., மாவட்ட நிர்வாகிகளிடையே ரகசிய சர்வே நடத்தப்பட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அதில், திமுக 40 தொகுதிகளை தரவில்லை எனில், தவெக உடன் கூட்டணி அமைக்கலாம் என கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம். ஏற்கெனவே, டெண்டர் கிடைப்பதில்லை, திமுகவால் காங்.,கிற்கு வளர்ச்சி இல்லை என பல அதிருப்திகள் நிலவுகிறது. இது தொடர்பாக காங்., தேசிய தலைமை ஆலோசனை நடத்திவருகிறதாம்.
News November 14, 2025
தேர்தல் முடிவு.. அரசியலில் இருந்து விலகலா?

நிதிஷ்குமாரின் JD(U) கட்சி 25 இடங்களுக்கு மேல் வென்றால், தான் அரசியலில் இருந்து விலகிவிடுவதாக பிரசாந்த் கிஷோர் சவால் விட்டிருந்தார். தற்போதைய நிலவரப்படி JD(U) 76 இடங்களில் முன்னிலையில் உள்ளது. எனவே, பிரசாந்த் கிஷோர் உடனடியாக அரசியலில் இருந்து விலக வேண்டும் என்று JD(U) கட்சியினர் கூறி வருகின்றனர். அதேநேரம், அவரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


