News October 26, 2025
வழுக்கை விழுந்த இடத்தில் முடி வளர அருமையான TIPS

ஆண்களே, முடி உதிர்வு அதிகமாக இருப்பதால் இளம்வயதிலேயே வழுக்கை விழுகிறதா? கவலைய விடுங்க. அதனை இயற்கையான முறையிலேயே சரி செய்யலாம். கற்றாழை ஜெல்லையும், ஆமணக்கு எண்ணெயையும் கலந்து முடியின் வேர்களில் தடவுங்கள். அரை மணி நேரம் ஊறவைத்த பின் தலைக்கு குளியுங்கள். வாரத்திற்கு 2 முறை இதனை செய்து வந்தால், வழுக்கையிலும் முடி வளரும். பலரது பிரச்னைக்கு தீர்வாக இருக்கும் SHARE.
Similar News
News October 26, 2025
Cinema Roundup: ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா?

*’LIK’ படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல். *‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி நடிக்கிறாராம். *ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‘தனுஷ் 55’ படத்தில் ‘பைசன்’ கேமராமேன் எழில் அரசு இணைந்துள்ளார். *ஏ.எல்.விஜய் இயக்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
News October 26, 2025
அதிமுக கைகட்டி வேடிக்கை பார்க்காது: EPS

சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தனியார் கட்டுமான நிறுவனம் குடியிருப்புகளை கட்ட அரசு அனுமதி கொடுத்துள்ளதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கும் பாதுகாப்பு அரணாக இந்த சதுப்பு நிலங்கள் திகழ்வதாகவும், மக்களின் உயிரோடு திமுக அரசு விளையாடுவதை ஏற்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், இதை அதிமுக கைகட்டி வேடிக்கை பார்க்காது என்றும் கூறியுள்ளார்.
News October 26, 2025
பாத்ரூமில் அக்கா, தங்கை பலி.. சாவு இப்படியா வரணும்

கர்நாடகாவில் பாத்ரூமில் இருந்த கேஸ் கீசரில், LPG கேஸ் கசிந்து, அதை சுவாசித்த குல்ஃபாம், தாஜ் என்ற 2 சகோதரிகள் உயிரிழந்துள்ளனர். நீங்கள் இதை பயன்படுத்துகிறீர்கள் என்றால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். யூனிட் வெளியே நிறுவப்பட வேண்டும், பயன்பாட்டில் இல்லாத போது ஆஃப் செய்ய வேண்டும், கேஸ் கசிகிறதா என அடிக்கடி சோதிக்கவும் கூறுகின்றனர்.


