News April 22, 2025
சூப்பர்ல.. வாட்சப்பில் புது அப்டேட்..!

மக்களே, வாட்சப்ல ஒரு சூப்பர் அப்டேட் வரப்போகுது. அதாவது, வாட்சப் மெசேஜை அங்கயே மொழி பெயர்க்கிற ஆப்சன் வரப்போகுதாம். இதுமூலமா, வேறவேற மொழி பேசுறவங்க கூட ஈசியா சாட் பண்ணிக்கலாம். மொழிபெயர்க்க வேறு ஆப் தேவை இல்லாததுனால உங்க வாட்சப் டேட்டா பாதுகாப்பா இருக்கும். ஆன்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் வாட்சப் யூஸ் பண்ணுறவங்களுக்கு இந்த அப்டேட் வந்துருச்சின்னு சொல்லப்படுது. இனி மொழி பிரச்னை இல்லப்பா!
Similar News
News April 22, 2025
போப் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்!

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முற்போக்கு கொள்கையுடன் பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமை அவர் என போப் பிரான்ஸூக்கு புகழாரம் சூட்டப்பட்டது. மனித நேயத்துடன் திருச்சபையை வழிநடத்தியவர் போப் என சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார். இதைத் தொடர்ந்து எம்எல்ஏக்கள் எழுந்து நின்று 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.
News April 22, 2025
நடிப்பில் இருந்து விலக இதுவே காரணம்.. போட்டுடைத்த ரம்பா

2000-களில் ‘சார்.. ரம்பா சார்’ என சொல்லாத இளைஞர்களே இருக்க முடியாது. ஆனால், 15 ஆண்டுகளாக அவர் படங்களில் நடிக்கவில்லை. இது குறித்து பேசிய ரம்பா, ஒரு குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளுடன் இருக்க வேண்டும் என நினைத்ததால், சினிமாவில் இருந்து தள்ளி இருந்ததாகவும், எப்போதும் தன் முதல் காதல் சினிமாதான் என்றும் தெரிவித்தார். மீண்டும் அவர் நடிப்பார் என்றே தெரிகிறது. உங்களுக்கு பிடிச்ச ரம்பா படம் எது?
News April 22, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹2,200 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.22) ஒரே நாளில் சவரனுக்கு ₹2,200 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,290-க்கும் ஒரு சவரன் ₹74,320-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ₹111-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,11,000-க்கும் விற்பனையாகிறது.