News August 10, 2024
மகா நிலநடுக்கம்: எச்சரிக்கை விடுத்த ஜப்பான் விஞ்ஞானிகள்

ஜப்பானின் தெற்குக் கடலோரப் பகுதியில், ‘மகா நிலநடுக்கம்’ ஏற்படும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் முதல்முறையாக எச்சரித்துள்ளது. கியூஷூ தீவில் ஆக., 8ஆம் தேதியன்று 7.1 ரிக்டரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அழுத்தம் ஜப்பானின் பசிபிக் கடல் முழுவதும் பரந்துள்ளது. இது குறித்து ஆய்ந்த விஞ்ஞானிகள் ஒரு வாரத்துக்குள் மகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்
Similar News
News November 26, 2025
கர்நாடகா CM மாற்றமா? முடிவுக்கு வரும் பஞ்சாயத்து!

கர்நாடகா காங்கிரஸ் கோஷ்டி பூசல் குறித்து, வரும் டிச.,1 நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக, தலைமை முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் CM மற்றும் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக டிகே சிவக்குமார் ராகுல் காந்தியை தொடர்பு கொள்ள முயற்சித்த நிலையில், அவர் பொருத்திற்குமாறு கூறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News November 26, 2025
பிரபல குடும்பத்தில் துயர சம்பவம்

பிரபல கம்லா பசந்த் (பான் மசாலா) கம்பெனியின் உரிமையாளர் கமல் கிஷோரின் வீட்டில் துயரமான சம்பவம் நடந்துள்ளது. கமல் கிஷோரின் மருமகள் தீப்தி செளராசியா நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். கணவர் ஹர்பிரீத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர், உயிரை மாய்த்துக் கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக விசாரணை நடத்தும் டெல்லி போலீஸ், ஒரு முக்கியமான டைரியை கைப்பற்றியுள்ளது.
News November 26, 2025
விலை குறைந்தது.. மக்கள் நிம்மதி!

மழை, வரத்து குறைவால் கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது. மேட்டுப்பாளையம் சந்தையில் நேற்று ₹40-₹60-க்கு விற்பனையான கேரட் இன்று ₹25- ₹40-க்கும், நேற்று ₹60-₹70-க்கும் விற்பனையான பீட்ரூட் இன்று ₹30-₹40-க்கும் விற்பனையாகிறது. சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தக்காளி, முருங்கை உள்ளிட்ட காய்கறிகளின் விலை வரும் நாள்களில் குறையும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.


